சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலங்காத்தால 4 மணிக்கு, விழுப்புரம் பஸ்ஸில் ஏறிய திமுக அமைச்சர்.. பயணிகள் திகைப்பு: சபாஷ் செயல்புயல்

பஸ்ஸில் ஏறி தடுப்பூசி குறித்த ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Google Oneindia Tamil News

சென்னை: அதிகாலையில் திமுக அமைச்சர் பஸ்ஸில் ஏறி, தன் கடமையை செவ்வனே செய்த சம்பவம்தான் வைரலாகி கொண்டிருக்கிறது.. அவர் நம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தான்..!

தொற்றின் தீவிரம் தமிழகத்தை உலுக்கி எடுத்து கொண்டிருந்த நேரம் அது.. தமிழகத்தின் தலைநகரிலேயே, கொத்து கொத்தாக ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் இறந்து கொண்டிருந்த ஆபத்தான நேரமும்கூட.

அப்போதுதான் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.. மிக சவாலான நேரம் அது.. லிஸ்ட்டில் சுகாதாரத்துறை அமைச்சராக யார் நியமனம் என்ற ஆர்வம்தான் தமிழக மக்கள் மனதில் பரபரப்பாக எழுந்தது...

கொரோனா வந்தும் கமல்ஹாசன் நல்லாயிருக்குறதுக்கு காரணமே ரெண்டு தடுப்பூசிதான்.. மா. சு தகவல்! கொரோனா வந்தும் கமல்ஹாசன் நல்லாயிருக்குறதுக்கு காரணமே ரெண்டு தடுப்பூசிதான்.. மா. சு தகவல்!

 மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

செயல்வீரர் மா.சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டபோதே, சரியான தேர்வாக பார்க்கப்பட்டது.. அன்று முதல் இன்றுவரை தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் இருந்து சிறிதும் ஓயவில்லை மாசு. தமிழ்நாடு முழுக்க இன்று 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது... கிட்டத்தட்ட 50 ஆயிரம் முகாம்களில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தடுப்பூசி

தடுப்பூசி

இதற்காக, கடந்த சிலதினங்களாகவே, முகாம் தவிர வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் இப்போதுவரை 80 சதவீதம் பேர் தடுப்பூசியும், 45 சதவீதம் 2வது டோஸும் செலுத்தியுள்ளனர்... இப்படிப்பட்ட சூழலில்தான் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்வதற்காக மா.சுப்பிரமணியன் விழுப்புரம் சென்றிருக்கிறார்.

போட்டிகள்

போட்டிகள்

எப்பவுமே காலையில் உடற்பயிற்சி செய்யக்கூடியவர் மாசு.. மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வையும் ஏற்படுத்துபவர்.. இப்போது அமைச்சரான பிறகும்கூட, காலையில் உடற்பயிற்சி செய்வதை விடவில்லை.. வாக்கிங், ஜாக்கிங் செல்லும்போதுகூட, அங்கு சாலையில் செல்லும் மக்களிடம் தடுப்பூசி போட்டீங்களா என்று அக்கறையுடன் விசாரிப்பார்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

ஒருமுறை இப்படித்தான், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்றிருந்தார்.. த.செங்கமேடு என்ற கிராமத்தில் வாக்கிங் சென்றுவிட்டு, அங்கிருந்த ஒரு டீக்கடையில் புகுந்தார்.. ஒரே ஒரு பென்ச்தான் அந்த குடிசை வேய்ந்த டீ கடையில் போடப்பட்டிருந்தது.. அங்கு உட்கார்ந்து, டீ குடிக்க வந்திருந்தவர்களிடம் தடுப்பூசி குறித்து கேட்டார்.

 அடர்ந்த காடு

அடர்ந்த காடு

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றிருந்தார்.. மூக்கன்கரை என்று ஒரு மலைகிராமம்.. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் 15 கி.மீ நடந்துதான் செல்ல வேண்டும்.. பாதையும் சரியாக இருக்காது.. யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்குமாம்.. இதுவரை மலை கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் கூட யாரும் வந்து போகாத நிலையில், திடீரென ஒருநாள் மாசு சென்றுவிட்டார்.. அதுவும் கையில் ஒரு குச்சியை எடுத்து கொண்டு, வனப்பகுதிக்குள் நடந்தே சென்று அந்த மலைகிராம மக்களிடம் தடுப்பூசி அவசியத்தை புரிய வைத்ததையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

வாக்கிங்

வாக்கிங்

அந்த வகையில், இன்று விழுப்புரம் சென்றிருக்கிறார் அமைச்சர்.. வழக்கம்போல் இன்று காலை 4 மணியளவில் விழுப்புரம் நகர் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டே புது பஸ் ஸ்டாண்ட் வரை வந்துவிட்டார்.. அங்கு ஒரு பஸ் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது, அதில் திடீரென ஏறியவர், உட்கார்ந்திருந்த பயணிகளிடம் தடுப்பூசி செலுத்திகொண்டீர்களா? என்று விசாரித்தார்.. 2 ஊசியும் போட்டாச்சா? எங்கிருந்து வர்றீங்க? என்று தனித்தனியாக அனைவரிடமும் விசாரித்தார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அனைவரும் செலுத்தி கொண்டோம் என்று பதில் சொன்னார்கள்.. அதிலும் ஒருவர், நான் இன்னும் போடவில்லை என்றார்.. உடனே இன்றைக்கு நடக்கும் முகாமில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்திவிட்டு சென்றார். 4 மணிக்கு அமைச்சர் இப்படி வருவார் என்று அந்த பஸ்ஸில் யாருமே எதிர்பார்க்கவில்லை.. தடுப்பூசிகளின் அவசியத்தை விடாமல் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறார் நம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

English summary
DMK Minister Ma Subramanian sudden inspection in Villupuram New bus stand this morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X