விஜய் அன்னா ஹசாரே மாதிரி ஒரு வருஷம் உண்ணாவிரதமா இருந்தாரு? எங்களுக்கு வேலை இருக்கு! சேகர்பாபு பொளேர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று பரந்தூர் சென்றது குறித்து திமுக அமைச்சர்கள் பதில் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விஜய் ஒன்றும் அன்னா ஹசாரே போல் ஓர் ஆண்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை எனவும், நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது என பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மாநில மாநாடு மூலம் அரசியலில் குதித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்வதாக விமர்சிக்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் தான் விஜயின் செயல்பாடுகளும் இருந்தது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் மக்களை விஜய் சந்தித்து பேசுவார் என அறிவிக்கப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி வாங்கப்பட்ட நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்து பேசினார். சிறுவன் ராகுல் பேசிய வீடியோவை கண்டு மக்களை சந்திக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும், தனது முதல் கள அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து தொடங்க வேண்டும் என தான் நினைத்ததாகவும், அதற்காகவே இங்கு வந்து மக்களை சந்தித்துள்ளதாக பேசினார்.
மேலும் விவசாயிகளை காக்க வேண்டும் எனக் கூறிய திமுக தற்போது காக்க வேண்டாமா? என கேட்டதோடு ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு விஷயத்துக்காக தான் இங்கே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்கிறார்கள் என விமர்சித்தார். மத்திய அரசை விட மாநில அரசை விமர்சித்தே விஜயின் பேச்சு இருந்தது ஆளுங்கட்சியான திமுகவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து விஜயின் பேச்சுக்கு திமுகவினர் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள், நடிகர் விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஒன்றும் அன்னா ஹசாரே போல ஓராண்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை எனக் கூறியுள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தங்களுக்கு மக்கள் பணி இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ஓட்டேரி பகுதியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மேயர் பிரியாவுடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் பரந்தூர் சென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்," அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்? கடந்து சென்று விட்டது. நேற்றைய நிகழ்வு நேற்றோடு எல்லாம் முடிவடைந்து விட்டது. இன்றைய மக்கள் பணியை நாங்கள் சூரியன் உதிக்கும் முன்னர் ஆரம்பித்துள்ளோம். நடு இரவில் தான் மக்கள் பணி முடிந்து வீடு திரும்புவோம். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை" என்றார்.
-
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications