அதிசயம் ஆனால் உண்மை... எந்த அமைச்சரும் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழவில்லை..!
சென்னை: தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் யாரும் முதலமைச்சர் காலில் விழவில்லை என்பது இன்றைய தினம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக திகழ்கிறது.
பொதுவாக இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு தலைமைக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு காலில் விழுந்து வணங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் சுயமரியாதையை கொள்கையாக பின்பற்றுவதாலோ என்னவோ இந்தச் சடங்குகளை திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் காண முடியவில்லை.

திமுக அமைச்சரவை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் அனைவரும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த ஸ்டாலினை நோக்கி அவர்கள் வணக்கம் மட்டுமே தெரிவித்தனர். ஒரு சிலர் பொன்னாடையை கையில் கொடுத்து தங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

காலில் விழவில்லை
இதில் ஒருவர் கூட ஸ்டாலின் காலில் விழவில்லை என்பது சற்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக திகழ்கிறது. யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாகவும் அமைச்சர்கள் அவரவர் சுயமாக செயல்படுவதற்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடும் விதமாகவும் இந்தக் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

பதவிப் பிரமாணம்
ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினை நோக்கி கம்பீரமாக வணக்கம் தெரிவித்துவிட்டு அமைச்சர்கள் சென்றார்கள். மேலும், அவர்கள் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வரும்போதும் சரி அதற்கு பிறகு அங்கிருந்து செல்லும் போதும் சரி மிக கேசுவலாக எப்போதும் போல் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேசுவல்
அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்பதற்காக ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கியோ, அவரது புகழ் புராணம் பாடவோ இல்லை. மாறாக தங்கள் புன்னகையை மட்டுமே ஸ்டாலினை நோக்கி செலுத்தினர். இதனிடையே சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற டாக்டர் மதிவேந்தன் மட்டும் முதல் முறை அமைச்சரானதால் சற்று பதற்றத்துடன் காணப்பட்டார்.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..!












Click it and Unblock the Notifications