3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு சலுகைகள் அளிக்கணும்.. சட்டசபையில் திமுக எம்எல்ஏ பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3-வது குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில், திமுக எம்எல்ஏ பர்கூர் மதியழகன் கோரிக்கை அளித்தார்.

தமிழக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு பெற்றது. இறுதி நாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியக் கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதேபோல பல்வேறு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

dmk-mla-demands-in-tamil-nadu-assembly-to-announce-and-encourage-more-benefits-for-3rd-child

சலுகைகள் வழங்க வேண்டும்

இதற்கிடையே, சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் பர்கூர் மதியழகன் மூன்று குழந்தைகளை பெற்றால் அதிக சலுகைகள் அறிவித்து, ஊக்குவிக்க வேண்டும் என்று பேசினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

முதல்வர் மு.க ஸ்டாலினின் நிர்வாகத் திறமையால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் நிர்ணயித்த இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. தொழில் முதலீடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு ஏற்ற வகையில், தொழில் துறைக்கு தேவையான திறன் படைத்த மனித வளத்தை உருவாக்குவது நமது கடமையாகிறது. உதாரணத்திற்கு, இந்திய சுதந்திரத்தின்போது தமிழ்நாடு மற்றும் பீகாரின் மக்கள்தொகை சமமாக இருந்தது.

பீகார் மக்கள் தொகை அதிகம்

தற்போது பீகாரின் மக்கள் தொகை 13.5 கோடியாக உள்ளது. ஆகையினால், மனித வளத் தேவைக்கு பிற மாநிலங்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. தமிழகத்தின் எதிர்கால நலனையும், தொகுதி மறு சீரமைப்பு போன்ற விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில், இரண்டு குழந்தைகள் போதும் என்ற கொள்கையை மாற்றி, மூன்றாவது குழந்தைக்கு அதிக சலுகைகள் அறிவித்து ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் எடுத்தால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையும் அபாயம் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட தென் மாநில முதல்வர்கள் கூறி வருகிறார்கள். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக பின்பற்றியதால் மக்களவை தொகுதிகள் மறுவரையறையில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.

பதினாறு பெற்றுக்கொள்ளுங்கள்

முதல்வர் ஸ்டாலின் கூட சமீப காலமாக பேசும் போது, குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என பொருள்படும் விதமாகவே பேசி வருகிறார். கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பதினாறு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லக் கூடிய நிலைதான் இப்போது வந்திருக்கிறது" எனக் கூறினார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இத்தகைய கருத்தை முன்வைத்தார். சந்திரபாபு நாயுடு பேசுகையில், "முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி அப்படி இல்லை. 2 குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்ற தம்பதியினர் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம்.

ஜப்பான் நிலைமை வந்துவிட கூடாது

அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும். வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு விகிதம் நிலையானதாக இருக்கிறது. ஒரு குழந்தையைப் பெறுகிற நிலைமைகூட தற்போது மாறி வருகிறது. இருவரும் சம்பாதித்தாலும் குழந்தையே தேவை இல்லை என்கிற முடிவிலும் சில தம்பதிகள் இருக்கின்றனர்.

இது மக்கள் தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இப்படி செய்ததால் பணிகளுக்கு நாம் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. நமது நாட்டிலும் அப்படியான ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+