விஜய் பேச்சுக்கு முன்பு.. சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிக்க கோரி திமுக எம்.எல்.ஏக்கள் அமளி!
சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அஜெண்டாவின் படி சட்டசபை நடைபெறும் என அறிவித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். இதன் காரணமாக திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் தேதி என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியுள்ளது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசி வருகிறார்.
குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அஜெண்டாவின் படி சட்டசபை நடைபெறும் என அறிவித்து, அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
இதன் காரணமாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர். திமுக உறுப்பினர்களின் அமளிக்கு நடுவே, சட்டமன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications
