''முறைகேடுகளின் மொத்த உருவம் பழனிசாமி ஆட்சி''! சி.ஏ.ஜி.அறிக்கையை அலசி ஆராய ஆரம்பித்த முரசொலி!
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்திருப்பது சிஏஜி அறிக்கை மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அதிகபட்ச போட்டி ஏலத்தைப் பெற வேண்டும் என்ற துறையின் முயற்சி நிறைவேறவில்லை எனவும் சிஏஜி ரிப்போர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு;
''தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் என்பது இந்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவுக் கணக்கை சரிபார்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். இதன் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர் ஆவார்.

இத்தகைய தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் என்ன மாதிரி நடந்து கொண்டுள்ளார் என்பதை கண்ணாடியைப் போல எடுத்துக் காட்டுகிறது இந்த அறிக்கை.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து சி.ஏ.ஜி. எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஒப்பந்ததாரர்களால் ஏலம் சமர்ப்பிக்கப் பட்ட கணினியின் அடையாள முகவரியும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியும் தரவுத் தளம் கைப்பற்றியது. ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முகவரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகையில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களைச் சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 87 ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 2091 டெண்டர்கள் ஒரே கணினியைப் பயன்படுத்தி தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இந்த மூன்று ஆண்டில் கோரப்பட்ட 907 ஒப்பந்தப் புள்ளிகளில் ஒவ்வொரு ஒப்பந்தப் புள்ளிக்கும் 2 முதல் 4 டெண்டர்கள் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஏலதாரர்கள், துறைசார் கணினிகளின் வாயிலாக ஏலங்களைச் சமர்ப்பித்ததின் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும். அதிகபட்ச போட்டி ஏலத்தைப் பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை.
மே 2022 இறுதிக் கலந்தாய்வின்போது முதன்மைச் செயலாளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
அரசு இதை ஏற்றுக் கொண்டு ஆகஸ்ட் 2022-ல் இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகக் கூறியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications