திமுக எம்.பி அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது.. 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக எம்.பிக்கு கௌரவம்!
சென்னை: திருவண்ணாமலை திமுக எம்.பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு எம்.பிக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெற உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மூலம் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16 மற்றும் 17வது மக்களவையில் சிறப்பான பங்களிப்பு அளித்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு சன்சத் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது.
பருத்ஹரி மஹ்தாப் (பிஜு ஜனதா தளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்), என்.கே.பிரேமச்சந்திரன் (சமூகப் புரட்சிக் கட்சி), ஸ்ரீரங் அப்பா பர்னே (சிவசேனா), ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனா உத்தவ் தாக்கரே), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனா), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்) ஆகியோர் சன்சத் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), பித்யூத் பரன் மஹாதோ (பாஜக), பி.பி.சௌத்ரி (பாஜக), மதன் ராத்தோர் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக), திலீப் சைக்கியா (பாஜக) ஆகிய எம்.பிக்களுக்கும் சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு நிரந்தரக் குழுக்களான நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும் சிறந்த செயல் திறனுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15 ஆம் ஆண்டு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி ஒருவருக்கு சன்சத் ரத்னா விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications