Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு திட்டம்- தாத்தா D.N.வடிவேலு கவுண்டர் பெயரா? சீண்டிய சீமான் தம்பிக்கு செந்தில்குமார் எம்பி சூடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு திட்டங்களில் தமது பெயருக்கு முன்னால் DNV என இடம் பெறுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ட்விட்டரிலேயே சுடச் சுட பதிலடி கொடுத்திருக்கிறார் தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார்.

சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக செயல்படக் கூடியவர் டாக்டர் செந்தில்குமார் எம்.பி. திராவிடர் இயக்க கொள்கைகளை முன்னிறுத்தி அவர் பதிவிடும் கருத்துகள் திமுகவுக்குள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தியும் இருக்கின்றன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் விளம்பரத்தை சன் டிவி ஒளிபரப்பியது. அதற்கு பொதுவெளியில் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார் டாக்டர் செந்தில்குமார்.

செந்தில்குமார் எம்.பி. சர்ச்சை

செந்தில்குமார் எம்.பி. சர்ச்சை

அண்மையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை செந்தில்குமார் எம்.பி. தொடங்கி வைக்க சென்றார். அப்போது பொதுப் பணித்துறை சார்பில் அர்ச்சகர் ஒருவரை வைத்து இந்துமுறைப்படி பூஜை செய்யத் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதை கண்ட செந்தில்குமார் ஆவேசமடைந்து அதிகாரிகளை வெளுத்தெடுத்தார். செந்தில்குமார் எம்.பி.யின் இந்த ஆவேச வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. விவாதப் பொருளாகவும் மாறியது. இது தொடர்பாக இப்போதும் சர்ச்சைகள் தொடருகின்றன.

சீண்டிய சீமான் தம்பி

சீண்டிய சீமான் தம்பி

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான @idumbaikarthi என்பவர், அரசுத்திட்டங்களில் என்ன DNV எனும் குறியீடு? D.N.வடிவேலு கவுண்டர் எனும் தாத்தாவின் பெயரா மருத்துவரே? @DrSenthil_MDRD என ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். இதனை டாக்டர் செந்தில்குமார் எம்.பி.க்கும் டேக் செய்திருந்தார் @idumbaikarthi. அவரது இந்தப் பதிவுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

செந்தில்குமார் எம்பி விளக்கம்

செந்தில்குமார் எம்பி விளக்கம்

இதனைத் தொடர்ந்து டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தமது விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், My registered name for Elections and in Parliament records is Dr.DNV Senthil Kumar S Hope this clarifies- தேர்தல்கள், நாடாளுமன்ற ஆவணங்களில் டாக்டர். டிஎன்வி. செந்தில்குமார் எஸ் என்பதுதான் பதிவு செய்யப்பட்ட பெயர். இந்த விளக்கம் போதுமானது என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

டி.என்.வடிவேலு கவுண்டர்

டி.என்.வடிவேலு கவுண்டர்

டாக்டர் செந்தில்குமார் எம்.பி.யின் தாத்தா டி.என்.வடிவேலு கவுண்டர், முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தவர். பெருந்தலைவர் காமராஜர் காலத்து அரசியல் சகா. தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+