10 நிமிடத்தில் மருந்து சப்ளை? உயிரோடு விளையாடும் திட்டத்தை தடை செய்க.. குரல் கொடுத்த திமுக எம்.பி!
சென்னை: “10 நிமிடத்தில் மருந்துகள் சப்ளை செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மக்களின் உயிரோடு விளையாட முற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று ராஜ்யசபாவில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என் சோமு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, இ-பார்மஸி மூலமாக ஆன்லைனில் 10 நிமிடங்களில் மருந்து மாத்திரைகளை டெலிவரி செய்யும் திட்டம் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும், இந்த திட்டத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி சோமு, “உணவுப் பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள், அதன் தொடர்ச்சியாக பத்தே நிமிடத்தில் மருந்து, மாத்திரைகளை டோர் டெலிவரி செய்வதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த மருத்துவ உலகையும், மருந்து நிறுவனங்களையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
உயிர்காக்கும் மருந்துகளை, இப்படி படு வேகத்தில் கொண்டுவந்து கொடுக்கிறோம் என்று சொல்வது, இந்திய மருந்து சட்டங்களை மீறுவது மட்டுமல்ல, பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். நோயாளிகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் இந்த செயல், தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள அவசியமான மருந்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாகும்.
மருந்தகங்களை நாடும் நுகர்வோரின் பாதுகாப்புக்காக, குறிப்பிட்ட நோயாளியின் அடையாளம், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் பட்டியல் போன்றவற்றை சரிபார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறையை இது அப்பட்டமாக மீறுகிறது. அதனால்தான், பத்து நிமிடங்களில் மருந்துகளை சப்ளை செய்கிறோம் என்று ஸ்விக்கியின் துணை நிறுவனமான இன்ஸ்டா மார்ட்டும், இ-பார்மஸி நிறுவனமான பார்ம் ஈஸியும் இணைந்து எடுத்த இந்த முடிவை அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.

அத்துடன் இந்த புதிய நடைமுறையில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் ஏற்கெனவே சில விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம் என்பதையும் அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டி தனது கவலையைப் பகிர்ந்துள்ளது.
பத்து நிமிடத்தில் மருந்துகளை சப்ளை செய்யும் வேகத்தில் காலாவதியான மருந்துகளையோ, போலியான மருந்துகளையோ நோயாளிகளுக்கு கொடுக்கும் ஆபத்து இருப்பதை அரசு உணர வேண்டும். அவசியமான பாதுகாப்பு நடைமுறைகளை இந்த பத்து நிமிட டோர் டெலிவரி முறையில் நிச்சயமாக கடைபிடிக்க முடியாது. எனவே, பத்து நிமிடத்தில் மருந்துகள் சப்ளை செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மக்களின் உயிரோடு விளையாட முற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications