அரசியல் அப்புறம்.. உதவி கேட்ட நாம் தமிழர் தம்பி! அண்ணனாக வந்த திமுக எம்பி செந்தில்குமார் -இதான் மனிதம்
சென்னை: விபத்தில் சிக்கிய தன்னுடைய நண்பரின் சிகிச்சைக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி உதவி கோரிய நிலையில் திமுக எம்பி செந்தில் குமார் உதவி செய்து இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "விபத்தில் சிக்குண்ட இளைஞர் மீண்டுவர உதவுங்கள்! மறுவாழ்வு கொடுங்கள்! இவர் பெயர் ஐயப்பன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர். என்னோடு ஒரே கல்லூரியில் படித்தவர். சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் விபத்தில் சிக்குண்டு, காலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அம்மாவும், அப்பாவும் இறந்துவிட்டதால் அண்ணனின் அரவணைப்பில்தான் தற்போது இருக்கிறார்.

கையிலிருந்த கொஞ்ச நஞ்ச பணம், கடன் வாங்கியதென இலட்சக்கணக்கில் செலவு செய்தாகிவிட்டது. இன்னும் சிகிச்சை மீதமிருக்கிறது. அதற்கான நிதியாதாரம் இல்லாததால் செய்வதறியாது தவித்து வருகிறார். "என் கால் மட்டும் சரியாகிவிட்டால் போதும். என்னை நான் பாத்துக்குவேன். அதை சரி பண்ணிவிட்டா போதும்" என உதவிக் கோருகிறார். அவருடைய அலைபேசி எண்: 6382974470
Name - Iyappanarchunan,
AC No - 3261101012904
IFSC Code - CNRB0003261
Gpay no - 6382974470
நிதியுதவியோ, சிகிச்சையாகச் செய்துகொடுத்தோ அவர் மீண்டுவர உதவுங்கள்! காயம்பட்டு நிற்கும் இளைஞனுக்கு மறுவாழ்வு கொடுங்கள்!
முடிந்தளவு செய்தியைப் பகிருங்கள்!" என்று குறிப்பிட்டு இருந்தார். -
விபத்தில் சிக்குண்ட இளைஞர் மீண்டுவர உதவுங்கள்! மறுவாழ்வு கொடுங்கள்!
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) December 12, 2023
----------------------------
இவர் பெயர் ஐயப்பன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர். என்னோடு ஒரே கல்லூரியில் படித்தவர்.
சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர் கடந்த 2020ஆம் ஆண்டு… pic.twitter.com/PEYEzrxtgc
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இதை ரீட்வீட் செய்த திமுக எம்பி செந்தில்குமார், "அவரை தொடர்பு கொண்டு பேசியதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளர். ஏற்கனவே சிகிச்சை எடுத்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து நிலையில் சிகிச்சைக்கு தேவையான பண உதவி செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் தளத்தில் திமுக எம்பி செந்தில் குமார் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "தோழர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் தோழர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யும் எண்ணத்தில் 200 டிவிட்டர் நண்பர்கள் தலா ரூ.500 என 1 லட்சம் #targeted_crowd_funding மூலம் உதவ நினைக்கும் நண்பர்கள் #medicalhelp Hashtag அல்லது எனக்கு தனியாக மெசேஜ் அனுப்பினால் அவரது வங்கி கணக்கு அனுப்புகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தோழர் @idumbaikarthi அவர்களின் தோழர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யும் எண்ணத்தில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 27, 2024
200 டிவிட்டர் நண்பர்கள் தலா ரூ.500 என 1 லட்சம் #targeted_crowd_funding மூலம் உதவ நினைக்கும் நண்பர்கள்#medicalhelp
Hashtag அல்லது எனக்கு DM
அனுப்பினால் அவரது வங்கி கணக்கு அனுப்புகிறேன். https://t.co/yzA9tg6i6P pic.twitter.com/eO0D2ZmP3X
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications