அதிமுக - தவெக கூட்டணி.. மீன் போல மாட்டிய விஜய்? திமுக அவசரமாக எடுக்க போகும் சர்வே! பின்னணி
சென்னை: அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று வெளியான சர்வே ஒன்று தெரிவித்தது. இந்த நிலையில் பாஜக இல்லாமல் அதிமுக - தவெக மட்டும் கூட்டணி வைத்தால் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று திமுக தரப்பு புதிய சர்வே எடுத்து வருகிறதாம்.
விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார்.

விஜய் - அதிமுக - பாஜக கூட்டணி
சமீபத்தில் குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக எடுத்த சர்வே பின்னணி
இது தொடர்பாக ஆளும் திமுக ரகசியமாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நடிகர் விஜய் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தி பிரிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள இந்த செய்தியில், ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என திமுக தரப்பு நடத்திய உட்கட்சி சர்வே கணித்துள்ளது. இந்த ஆய்வின்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வலுவான ஆதரவு இருப்பதும், திமுக-வுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக அந்த கட்சி மாறக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி (என்.டி.கே) 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.
பா.ஜ.க, அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அ.தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழக வாக்காளர்கள் எதிர்க்கும் போக்கு ஆகியவை இக்கூட்டணியின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றும் சர்வே கூறுகிறது.
தமிழக வெற்றிக் கழக தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில், திமுக-வின் வாக்கு சதவீதம் 45 ஆக குறையலாம். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், விஜயின் கட்சி 23 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு 5 சதவீதமாகக் குறையக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிமுக தவெக இன்னொரு சர்வே
ஆனால் இதில் பாஜக அல்லாத அதிமுக - தவெக கூட்டணி பற்றி சர்வே எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் பாஜக இல்லாமல் அதிமுக - தவெக மட்டும் கூட்டணி வைத்தால் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று திமுக தரப்பு புதிய சர்வே எடுத்து வருகிறதாம்.
இதையடுத்து ஆளும் திமுக தரப்பு அதிமுக தவெக தொடர்பாக இன்னொரு சர்வே எடுக்க உள்ளார்களாம். பாஜக அல்லாமல் இவர்கள் களமிறங்கினால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்ய உள்ளார்களாம்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications