"அநாகரீகம்".. அண்ணாமலை பாதயாத்திரையில் நடந்த "சம்பவம்".. பாய்ந்து வந்த திமுக.. கவனிச்சீங்களா!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இவர் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். அண்ணாமலை நடைபயணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முக்கியமாக இந்த நடைபயணம் தொடர்பாக தினசரி அப்டேட்களை உளவுத்துறை மாநில அரசுக்கு அனுப்பி வருகிறதாம். மத்திய அரசின் உளவுத்துறையும் இந்த நடைப்பயணத்தை கவனித்து வருகிறதாம்.
அதாவது நடைபயணத்தால் பயன் இருக்கிறதா? மக்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்? நடைப்பயணத்தை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? பாஜகவிற்கு இதனால் ஆதரவு கிடைக்கிறதா? என்று தினசரி ரிப்போர்ட்டை மத்திய, மாநில உளவுத்துறை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
பாரத் ஜோடோ யாத்திரை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பாணியில் யாத்திரை மேற்கொள்ள அண்ணாமலை இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். சாலைகளில் தினமும் மக்களை சந்தித்து பேசும் திட்டத்தில் அண்ணாமலை இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்கிறார்
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு: இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதன்படி இராமநாதபுரத்தில் பாதயாத்திரை என்கிற பெயரில் குடித்து விட்டு கூட்டத்தில்
பெண் ஊடகவியலாளர்களிடன் அத்துமீறி அநாகரிகமாக மிகவும் கீழ்த்தரமாக நடந்து உள்ளனர் இந்த காட்டுமிராண்டி பாஜகவினர், என்று ராஜீவ் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடக்கிறார்: இன்னொரு பக்கம் அண்ணாமலை இந்த நடைப்பயணத்தில் பெரிதாக நடக்கவில்லை. அவர் பெரும்பாலும் கேரவனில்தான் செல்கிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறதாம்.
அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது.
பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும். நவீன கழிப்பறை, குளியலறை என்று பொதுவாக கேரவனில் இருக்கும் வசதிகள் எல்லாம் இதில் உள்ளன. இந்தநிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் அவர் பெரிதாக நடக்காமல், காரிலேயே பயணம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த கேரவனில்தான் அண்ணாமலை அதிகமாக பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications