ஆடு நனைகிறது என்று...சீமான் மீது மாஜி தம்பி ராஜீவ் காந்தி அட்டாக்- ஸ்டாலின் படம் அவமதிப்பு விவகாரம்!
சென்னை: கர்நாடகாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் அவமதிப்பு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை முன்வைத்து இழிவான செயல்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய அருவறுப்பான செயல்களுக்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மு.க.ஸ்டாலின் தனிநபர் அல்ல. 8 கோடி தமிழ் மக்களின் முதலமைச்சர். அவரது உருவப்படத்தை அவமதிப்பது என்பது தமிழர் இனத்தை அவமதிப்பது. தமிழ்ப் பேரினத்துக்கு நிகழ்த்தப்படுகிற பெரும் அவமானம். முதல்வர் ஸ்டாலின் உருவப் படம் அவமதிக்கப்படுகிற போது என் நெஞ்சு வலிக்கிறது. ஆனால் திமுகவினர் ஏன் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி (நாம் தமிழர் கட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்தவர்) கண்டனம் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவதை போல் பாஜக மதவெறி கும்பலும்.. கரம்,சிரம்,புறம் உயர்த்தும் வாய் உதார் கோஷ்டியும்.... நம் முதலமைச்சரை கர்நாடகாவில் அவமானபடுத்துகிறார்கள் என கத்துகிறது!!!!

என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது அக் கும்பல் ?? தங்களைப்போல் கர்நாடாகவில் வயிற்று பிழைப்பு அரசியல் செய்யும் கன்னட மொழி வெறியன் வாட்டாள் நாகராஜ் போல் இங்குள்ள தமிழர்கள் ஆக வேண்டும் என்கிறார்களா?

சீமான் போல் உள்ள வாட்டாள் நாகராஜ்கள் கோபப்பட காரணமே காவேரி நீர் உரிமை விசயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாடும் சட்ட போராட்டமும் தான்!!. இவ்வாறு தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஜீவ் காந்தி.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications