நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா.. பாஜக தீர்மானத்திற்கு திமுக எம்பி அப்துல்லா நன்றி.. இதுதான் காரணமா!
சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பாஜகவின் தீர்மானத்திற்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் மத்தியில் பாஜகவை கொண்டு சேர்க்க மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஒவ்வொரு நாளும் திமுக மீதான கண்டன ஆர்ப்பாட்டங்கள், குற்றச்சாட்டுகள், அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமல்லாமல் திராவிட கட்சிகள் தவறவிடும் இடங்களை கச்சிதமாக பாஜக பயன்படுத்த தொடங்கியுள்ளது. அண்மையில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக சார்பாக பெரும் கூட்டம் நடத்தப்பட்டது.

அதேபோல் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள். திரைப்பட நட்சத்திரங்கள் ஆகியோருக்கு பாஜக சார்பாக முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் இளையராஜா, இயக்குநர் ராஜமவுலியின் தந்தை ராஜேந்திர பிரசாத், பிடி உஷா ஆகியோருக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டது.
அந்த வகையில் புதிதாக பாஜக நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்மொழிய நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழிமொழிந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க பாஜக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைத்து தமிழக பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நம்மாழ்வார் திமுக குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது உடன் பிறந்த சகோதரர் தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ வாக இருந்தவர் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நம்மாழ்வார் தனது வாழ்நாளின் இறுதிவரை பெரியாரின் மீது பேரன்பு கொண்டவராகவும் , திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்று கொண்டவராகவும், சனாதன எதிர்பாளராகவும் இருந்தவர். இது அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications