சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவுக்கு இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் ஆளுநர் வேட்டு- தமிழ்நாடு விவகாரத்தில் முரசொலி சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பெயர் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட விளக்க அறிக்கையை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜகவுக்கு கிடைக்கும் சொற்ப வாக்குகளுக்கும் வேட்டு வைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்கிறது முரசொலி.

இது தொடர்பாக முரசொலி எழுதிய தலையங்கம்: 'தமிழ்நாடு' பெயர் சர்ச்சையை மேதகு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் முடித்து வைக்க நினைப்பதாகத் தெரியவில்லை. மறுபடியும் தமிழர் நெஞ்சில் நெருப்பு மூட்டவே நினைக்கிறார். ''அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை'' என்பது அவரது புதிய அறிக்கையில் வெளிவரும் புதுக் கண்டுபிடிப்பாக இருக்கிறது. 'எந்தக் கால த்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை' என்கிறார்? வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடாம். இவர் பெரிய பாவாணர்! கண்டுபிடித்துச் சொல்கிறார்.

DMKs Murasoli slams Governor Ravi on Tamilnadu issue

எல்லாம் தெரிந்தவரைப் போல குறளுக்குத் தவறான பொருள் சொல்வதும், இப்போ து 'தமிழ்நாடே இல்லை' என்று சொல்வதும் அவர் வகிக்கும்
ப பொறுப்புக்கு அழகல்ல. இதெல்லாம வாசக ர் கடிதம் எழுதும் தகுதியும் கேள்வி கேட்கும் தகுதியும் படைத்தவர்க்கு இருக்க வேண்டிய 'அளவு' ஆகும்.

'இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய' --- என்கிறது சிலப்பதிகாரம். அதுவே 'தமிழ்நாடு', 'தமிழ்நன்னாடு' என்றும் சொல்கிறது.
கவுந்தியடிகள் மதுரைக்குச் செல்ல நினைத்து தனது எண்ணத்தைக் கூறும்போது, 'தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு' என்று பாடுகிறார். இந்நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பி இமயத்தில் இருந்து கல் கொண்டு வந்தான் என்கிறார் இளங்கோவடிகள்.

வட திசை மன்னர்க்கு எல்லாம் மூவேந்தர் சின்னத்தையும் சேர்த்து வரைந்து அனுப்பச் சொல்கிறார் இளங்கோவடிகள். 'தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி..' என்கிறது அந்தப் பாட்டு. "வடஆரியர் படைகடந்து தென் தமிழ்நாடு ஒருங்கு காண" -- என்று மதுரைக் காண்டத்தில் வருகிறது.

DMKs Murasoli slams Governor Ravi on Tamilnadu issue

'தமிழ்நாட்டகம்' என்கிறது பரிபாடல். 'தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்' என்கிறது அது. இவர் ஏதோ, அப்போது இல்லை, இப்போது இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

காசி இருக்கும் போது தமிழ்நாடு இல்லையா? தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா அவருக்கு? மாந்த இனம் தோன்றிய இடம் குமரிக் கண்டம். மக்கள் கூட்டம் வாழும் இடத்தை நாடு என்று சொல்வது தமிழ் வழக்கு ஆகும். 'நாடு' என்ற சொல்லைப் பார்த்ததும் எதற்காகப் பீதியடைகிறார்கள்? நாடு என்று சொன்னால் தனிநாடாகி விடுமா? வாய் சுட்டுவிடுமா?

சொல்லியல் செம்மல் இரா.இளங்குமரனார், 'நாடு என்பதற்கு பல்வேறு பொருள் உண்டு' என்கிறார். 'இடம் என்பது ஒரு பொருள். இடத்தின் பரப்புக்கு ஓர் அளவில்லை. சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகள் தனித்தனி நாடுகளாக விளங்கின. சில ஊர்ப்பெயர்கள் நாடு என இக்காலத்தும் வழங்கப்பெறுகின்றன. அதனால் சில ஊர்களைக் கொண்ட பகுதியும் தனியூர்களும் கூட நாடுகள் எனப் பெயர் பெற்றன என்பது விளங்கும்" என்கிறார்.

'பாண்டி நாடே பழம்பதியாகவும்' என்கிறது திருவாசகம். 'தென்னா டுடைய சிவனே போற்றி' என்கிறது திருவாசகம். 'உயர்ந்த குறுக்கிடும் பெரிய உச்சிகளைத் தாண்டி பல மொழிகள் பேசுகின்ற நாட்டுகளுக்கு விரும்பிய செயலைச் செய்வதற்காக மன்னன் சென்றான் ' என்கிறது அகநானூற்றுப் பாடல். எனவே நாடு, தமிழ்நாடு என்பது எல்லாம் 'சொல்' தோன்றிய காலம் முதல் இருப்பவை ஆகும்.

எனவே, இதனை அவர் பிரச்சினை ஆக்கத் தேவையில்லை. தவறானவர்களால், தவறாக அவர் வழிநடத்தப்படுகிறார் என்பது
தெரிகிறது. அவர்களை, அவர் தவிர்த்துக் கொள்வது அவருக்குமே நல்லது. 'தமிழ்நாடு' என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டக் காலத்தில் பெயர்
சூட்டிய தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள், ''ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய்த்திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம்
உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு, சிலருக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது" என்று
சொல்லிவிட்டுச் சொன்னார், ''இந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாத்துரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று
பொ ருள்" என்றா ர். பேரறிஞர் பெருந்தகை யின் ஆட்சியாகவே இன்றும் தொடர்வதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

DMKs Murasoli slams Governor Ravi on Tamilnadu issue

அவர்களுக்கு 'நாடு' என்ற சொல் மட்டுமல்ல, 'தமிழ்' என்று இருப்பதும் பிடிக்கவில்லை. மொழிவழி தே சிய இனத்தின் அடை யாளங்களை
முடிந்தவரை அழிப்பதுதான் அவர்களது வேலைத் திட்டம் ஆகும். அதற்காகத்தான் இப்படி சொல்லம்புகளை வீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருக்குறள் நமது அடையாளம். அது சமூகநீதியைப் பேசுகிறது. அந்த அடை யாளத ்தை அழித்து, அதனை சம ய நூலாக ஆக்கிச் சிதை ப்பது
அவர்களது வேலைத் திட்டம் ஆகும். திராவிடம் நமது அரசியலைப் பேசுகிறது. திராவிடம் என்பதே பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு என்று சொல்லி அந்த அரசியலையே கேள்விக்குள்ளாக்குவது அவர்களது திட்டம். அதே போலத்தான் 'தமிழ்நாடு' என்று இந்த நிலப்பரப்புக்கு பெயர் இருக்கக் கூடாது என்று
நினைப்பதும் ஆகும். 'தமிழகம்' என்றுதான் சொல்ல வேண் டும் என்பதற்கான விளக்கம் அளிக்க முன்வந்த ஆளுநர் அவர்கள், 'அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை' என்று சொல்லி இருப்பது, அதை விட மிகத் தவறான கருத்தாகும். இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருப்பதற்குப் பதிலாக அறிக்கை விடாமலேயே இருந்திருக்கலாம். அவரது சிந்தனையானது தமிழ் -- தமிழர் -- தமிழ்நாட்டுக்கு எதிரானதாக எவ்வளவு ஊறிப் போயிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. அதைவிட முக்கியமாக, பா.ஜ.க.வுக்கு இருக்கும் ஒன்றரை யணா வோட் டுக்கும் வேட் டு வைக்கவே அவர் வந்திருப்பதாகவும் தெரிகிறது.

அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லையா? எப்படி முடிவுக்கு வருகிறார் ஆளுநர்? சு.வெங்கடேசன் கேள்வி! அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லையா? எப்படி முடிவுக்கு வருகிறார் ஆளுநர்? சு.வெங்கடேசன் கேள்வி!

English summary
DMK's official daily Murasoli has slammed Governor Ravi on Tamilnadu issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X