சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கச்சத்தீவு திருவிழா- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியது டி.ஆர்.பாலு எம்.பி!

Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். முன்னதாக டக்ளஸ் தேவானந்தா தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியது மூத்த திமுக தலைவர் என்று மட்டும் பூடகமாக கூறியிருந்தார்.

கச்சத்தீவு திருவிழா: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதல்வர் ஸ்டாலின் பிரதிநிதி பேச்சு?கச்சத்தீவு திருவிழா: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதல்வர் ஸ்டாலின் பிரதிநிதி பேச்சு?

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இது சீனிகுப்பன் படையாச்சி என்ற தமிழக மீனவரால் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறும்.

சீனா ஏஜெண்ட் டக்ளஸ் தேவானந்தா சதி- இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது! சீனா ஏஜெண்ட் டக்ளஸ் தேவானந்தா சதி- இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது!

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

இத்திருவிழாவில் ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பர். இருநாட்டு தமிழர்களின் உறவையும் வலுப்படுத்தும் வகையில் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவித்தது இலங்கை அரசு. இது தமிழக பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். மேலும் இக்கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேரில் கொடுத்தார். அப்போது இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இது குறித்து பேசுவதாகவும் ஜெய்சங்கர் உறுதி அளித்திருந்தார்.

டக்ளஸ் போட்ட புதிர்

டக்ளஸ் போட்ட புதிர்

இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு செய்தியை கொடுத்திருந்தார். அதில், திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக தம்மிடம் பேசியதாகவும் அப்போது கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். ஆனால் தம்மிடம் பேசியது யார் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடாததால் இச்செய்தியின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்தது. இதனை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் செய்தியாகவும் வெளியிட்டது.

டக்ளஸுடன் பேசியது டி.ஆர்.பாலு

டக்ளஸுடன் பேசியது டி.ஆர்.பாலு

தற்போது திமுக ஆதரவு ஊடகமான சன் நியூஸில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தாமே பேசியதாகவும் கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத் தமிழர்களை அனுமதிக்க கோரியதாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கொடுத்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் பேசியதாவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

English summary
DMK's TR Balu spoke to Srilanka's Douglas Devananda on the Katchatheevu Festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X