விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன?
டெல்லி: வேறு வேலைகள் உள்ளது என முதல்வர் விஜய் சந்திப்பை உள்துறை அமைச்சகம் ரத்து செய்த நிலையில், குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதலமைச்சர் வி.டி சதீசனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் அவரின் முதல் டெல்லி பயணம் நிறைவடைந்துள்ளது. நேற்று மாலை பிரதமர் மோடியை சுமார் 10 நிமிடங்கள் சந்தித்த முதல்வர் விஜய், 4 கோரிக்கைகளை அடங்கிய கடிதத்தை வழங்கினார். மீனவர்கள் கைது விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மேகதாட்டு அணை விவகாரம், வான்வழி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போதும் ஜிஎஸ்டி நிதி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகள் வைத்தார். இதன்பின் முதல்வர் விஜய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த சந்திப்பை புறக்கணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
வேறு வேலைகள் உள்ளது என்று உள்துறை அமைச்சகம் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்தது. ஆனால் குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதல்வர் விடி சதீசனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு புறக்கணித்துள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இன்னொரு முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பும் நடக்கவில்லை. இதனால் டெல்லியில் இருந்து முதல்வர் விஜய் தமிழ்நாடு புறப்பட்டுள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருந்தால், நேற்றிரவே விஜய்யால் சென்னை திரும்பி இருக்க முடியும்.
இன்று காலை வரை விஜய் காத்திருந்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் டெல்லியில் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார். இதுவரை டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வராக இருந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் திரும்பி வந்ததே இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்திக்காமல் புறப்பட தயாரான போது, அவரை மறுத்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பதன் மூலம் தேசிய அளவில் தமிழ்நாட்டின் குரலை பதிவு செய்ய முடியும். அப்படியான ஒரு பொன்னான வாய்ப்பை விஜய் வீணடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் விஜய்யின் டெல்லி பயணம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.
-
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications