அமித்ஷா அப்பாயின்ட்மென்ட் தரலயா.. விஜய் மோடியிடம் சொன்ன அந்த வார்த்தை.. டெல்லி பயணத்தில் இவ்ளோ இருக்கா
சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம், அங்கு அவருக்கு ஏற்பட்ட சூழல்கள் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் சர்ச்சை பேச்சு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் வீடியோ ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தாமோதரன் பிரகாஷ் பேசும்போது, "தமிழக முதல்வர் விஜய் தனது டெல்லி பயணத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிறப்பு விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்றுள்ளார்.. இந்த விமானத்திற்கான ஒட்டுமொத்த முழு செலவையும் தமிழ்நாடு அரசுதான் முழுமையாக ஏற்கிறது.

பார்க்கிங் வாடகை மட்டுமே இரண்டரை லட்சம்
இந்த சிறப்பு விமானத்தை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்கான பார்க்கிங் கட்டணம் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
அதுமட்டுமல்ல இந்த தனி விமானம் பறப்பதற்கான எரிபொருள் கட்டணம் மற்றும் இதர பிற செலவுகள் என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கும் மேல் மக்கள் பணம் செலவு செய்யப்பட்டு உள்ளது.. இந்த பிரம்மாண்ட செலவில் ஆதவ் அர்ஜுனாவுடன் முதல்வர் விஜய் டெல்லிக்கு மிக முக்கியமாக சென்றிருக்கிறார்.
மோடியிடம் பேசிய 2 விஷயம்
டெல்லி சென்ற முதல்வர், தமிழகத்திற்கான மத்திய அரசு நிதி குறித்தோ, நீட் தேர்வு விலக்கு குறித்தோ அல்லது தமிழகத்தின் மிக முக்கியமான பிற மாநில உரிமைகள் குறித்தோ பேசுவதற்காக பிரதமரை சந்திக்கவில்லை..
நெதர்லாந்தில் உள்ள சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேட்டைத் திரும்பக் கொண்டு வந்ததற்காக பிரதமருக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கவும், அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்தை முறையாக முன்னிலைப்படுத்தக் கோரவும் மட்டுமே அவர் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமித்ஷா அப்பாயிண்மென்ட்
பிரதமரை சந்தித்த பிறகு, அடுத்தபடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்காக விஜய் தரப்பில் இருந்து முறைப்படி அப்பாயிண்ட்மென்ட் கேட்கப்பட்டு உள்ளது.. ஆனால், தனக்கு வேறு முக்கிய வேலைகள் இருப்பதாகக் கூறி, விஜய்யைச் சந்திக்க அமித்ஷா முற்றிலும் மறுப்பு தெரிவித்து அப்படியே திருப்பி அனுப்பி விட்டார்.. டெல்லியில் தமக்கு நேர்ந்த இந்த மிகப்பெரிய அவமானத்தைத் தொடர்ந்து, விஜய் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய சினிமா கதாநாயகன், 30 வருடங்களாக மக்கள் மனதில் நீங்காமல் இருந்தாலும், கடந்த தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்றிருந்தாலும், டெல்லி அரசியல் என்று வரும்போது காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக மட்டுமே விஜய்யை பாஜக தலைமை பார்க்கிறது.. இதனால் டெல்லி கதவுகள் விஜய்க்கு முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது..
உயர்கல்வித்துறை அமைச்சர்
அதேபோல அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சு பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது.. தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை மிகக் கடுமையாகப் போராடிப் பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, இப்போதைய புதிய உயர்கல்வித்துறை அமைச்சரான காங்கிரஸின் விஸ்வநாதன் அப்படியே மொத்தமாக விட்டுக்கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை முறையாக நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு அறவே இல்லை என்றும், அந்த அதிகாரம் கவர்னருக்குத்தான் முழுமையாக உள்ளது என்றும் அமைச்சர் விஸ்வநாதன் பகிரங்கமாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.
மாநில உரிமை பறிபோகிறதா
மாநில அரசு நீதிமன்றம் வரை சென்று போராடிப் பெற்ற உரிமையை, அப்படியே மொத்தமாகக் காவு கொடுக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுவது மாநில உரிமைக்கு முற்றிலும் எதிரானது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.. மாநில உரிமையைக் காவு கொடுப்பதற்கு இந்த காங்கிரஸ் அமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கேள்வி எழுப்பியதுடன், மிகக் கடுமையான எதிர்ப்பையும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.
ஆக, அமைச்சர் விஸ்வநாதன் பாஜக மற்றும் கவர்னருக்கு ஆதரவாகவே முழுக்க முழுக்கச் செயல்படுகிறார் என்ற ஒரு தோற்றம் இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.. காங்கிரஸின் கோட்டாவில் உயர்கல்வித்துறை அமைச்சரான விஸ்வநாதன், மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் சண்டை போட்டு கஷ்டப்பட்டு வாங்கின உரிமையை அப்படியே பிஜேபிக்கும், கவர்னருக்கும் தாரைவார்க்கிறார்.
இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோவி. செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து உரிமைகளுக்காகப் போராடிய நிலையில், இப்போது காங்கிரஸ் கோட்டாவில் வந்துள்ள விஸ்வநாதனின் இந்த அதிரடி நடவடிக்கை மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது.. இங்கே யாரோட ஆட்சி நடக்கிறது? யார் நாட்டாமை? இங்கே என்ன நடக்குது என்ற பெரிய குழப்பமே அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது" என்றெல்லாம் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்..!!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications