மகிழ்ச்சியாகப் படிக்க.. மனநிறைவாக சம்பாதிக்க.. இருக்கிற ஒரே நல்ல கோர்ஸ் இதுதான்..!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நீங்கள் பலமுறை சென்றிருப்பீர்கள். நேர்த்தியான தோற்றத்தில், அழகான சீருடையில் சிரித்த முகமாய், பயணிகளிடம் கனிவுகாட்டி உரையாடியபடியே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களையும், இளைஞர்களையும் அங்கே பார்த்திருப்பீர்கள். ஏர் ஹோஸ்டஸ்களும், பைலட்களும், பணியாளர்களும் அங்கும் இங்குமாக நடந்துசென்று கொண்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள்.
அந்த காட்சிகளை பார்க்கும் மாணவ - மாணவிகளின் விழிகளில் வியப்பு ஏற்படுகிறது. 'நாமும் நல்லா படித்து இவங்களை மாதிரி மகிழ்ச்சியாக வேலை பார்க்கணும், மனநிறைவாக சம்பாதிக்கணும், ரசித்து வாழ்க்கையை நடத்தணும்' என்ற எண்ணம் அவர்களுக்குள் தோன்றுகிறது.

என்ன படிக்கலாம்
அவர்களைப் போன்று நாமும் விமான நிலையங்களில் வேலை பார்க்க, எங்கு போய் படிக்கணும்? எத்தனை மாசம் படிக்கணும்? படித்த உடன் இதுபோல் வேலை கிடைக்குமா? படிக்கும்போதே சம்பாதிக்க வழிமுறை இருக்கிறதா? என்பது போன்ற பற்பல கேள்விகள் மாணவ- மாணவிகளிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் எழுந்துள்ளது.
உண்மைதான். மாணவ- மாணவிகளின் அத்தகைய கேள்விகளுக்கு எங்கு, யாரிடம் போய் பதில் கேட்பது? என்று, யோசித்தபடியே தேடியபோது பலரும்; 'சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை' அடையாளங்காட்டினார்கள். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சிறந்த கல்வி நிறுவனம் அது.
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன்
சென்னை, அண்ணா சாலையில் மினி ஏர்போர்ட் போன்று கலைநுட்பத்துடனும், விமான தொழில்நுட்பத்துடனும் கலர்புல்லாக காட்சியளிக்கும், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்குள் நுழைந்தோம். விமான நிலையத்தில் பார்த்த அதே சீருடையில் கம்பீரமாக பத்து, பதினைந்து மாணவிகள் உற்சாகமாக புன்னகைத்தபடியே நடந்து சென்றனர்.
அவர்கள் யார்- எங்கே செல்கிறார்கள்? என்று விசாரித்தபோது, அவர்கள் சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் என்பதும், படித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் பகுதி நேர பணிக்காக விமான நிலையத்திற்கு செல்வதாகவும் தெரிவித்தனர். இன்னொருபுறத்தில் ஆச்சரியமான காட்சி ஒன்று அரங்கேறிக்கொண்டிருந்தது. 'பிளஸ்-டூ'வில் தேர்ச்சி பெற்ற ஏராளமான மாணவ - மாணவிகள் ஏவியேஷன் கோர்ஸில் சேர்ந்து படிக்க, அட்மிஷன் வாங்கிக் கொண்டிருந்தனர்.
முக்கிய தகவல்கள்
அந்த பரபரப்புக்கு மத்தியில் கல்வியாளரும், சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவருமான ஆர்.பூமிநாதனை சந்தித்து, மாணவர்களின் நலன் சார்ந்த கேள்விகளை முன்வைத்தோம். அவர் பதில் அளிக்கத் தொடங்கினார்!
"மாணவ சமூகம் முன்னேறினால்தான் நமது நாடு முன்னேறும். மாணவ சமூகம் முன்னேற வேண்டுமானால், அவர்களுக்கான சரியான கல்வியை நாம் அடையாளம் காட்டவேண்டும். மாணவர்கள் எந்த கல்வியை ரசித்து, அனுபவித்து, மகிழ்ச்சியோடு கற்கிறார்களோ அதுதான் சரியான கல்வி. படிக்கும்போதே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும், படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பினையும் அந்த கல்வி பெற்றுத்தரவேண்டும். அது காலத்திற்கு ஏற்ற கல்வியாகவும் இருக்கவேண்டும்.
விமானத்துறை சார்ந்த 'ஏவியேஷன்' படிப்புதான், தற்போது அப்படிப்பட்ட ஒரே சிறந்த கல்வியாகத் திகழ்கிறது. 1903-ம் ஆண்டு அமெரிக்காவில் ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. 123 ஆண்டுகளில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த துறை வளர்ச்சி பெற்று, கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. உதாரணத்திற்காக நான் சில புள்ளிவிவரங்களை தருகிறேன்" என்றபடி, ஆர்.பூமிநாதன் நம்மோடு பகிர்ந்துகொண்ட தகவல்கள் அனைத்தும் வியப்பானவை.
வேலைவாய்ப்புகள்
"விமானத் துறையில் உலக அளவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8.65 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய விமானத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்தியா உலகின் மூன்றாவது மிக பெரிய விமானச் சேவை சந்தையாக மாறியுள்ளது. 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள்தான் இருந்தன. தற்போது 163 விமான நிலையங்கள் இயங்குகின்றன.
இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2025-ம் நிதியாண்டில் 16.59 கோடி பேர் உள்நாட்டு பயணங்களுக்காக விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். 2035-ல் இந்த எண்ணிக்கை 44 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குதக்கபடி விமானங்களின் எண்ணிக்கையும், விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

2 கோடி வேலைவாய்ப்புகள்
இதில் இருந்து நான் மாணவ சமூகத்திற்கு சொல்ல விரும்பும் செய்தி என்னவென்றால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஏவியேஷன் துறையில் இந்திய அளவில் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்த சென்னைஸ் அமிர்தா திட்டமிட்டு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. நம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க சர்வதேச விமானத்துறை வல்லுனர் குழுவையும் உருவாக்கியுள்ளோம். அதனால் நமது மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.." என்ற மகிழ்ச்சியான தகவலையும் தெரிவித்தார்.
சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியில் எத்தனை வகையான கோர்ஸ்கள் இருக்கின்றன? என்ற கேள்வியை அவரிடம் கேட்டோம். "விமானத் துறை சார்ந்த பணி என்றாலே பலருக்கும் பைலட் மற்றும் ஏர்ஹோஸ்டஸ்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஏவியேஷனில் A வடி Z வரையுள்ள 20-க்கும் மேற்பட்ட கோர்ஸ்களை அந்தந்த மாணவ- மாணவிகளின் திறனுக்கு ஏற்பவும், அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் விதத்திலும் கற்றுக்கொடுக்கிறோம்.
பி.எஸ்சி. இன் ஏவியேஷன், பி.பி.ஏ.இன் ஏவியேஷன் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளும் இதில் நிறைய உள்ளன. 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பாடத்திட்டத்திற்கு ஏற்ற கல்விமுறையை அமல்படுத்தியுள்ளோம். இந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்கள் பயிற்சியளிப்பதுதான் எங்கள் வளர்ச்சிக்கு காரணம்" என்று கூறும் ஆர்.பூமிநாதன், சென்னைஸ் அமிர்தாவில் பயிலும் மாணவர்கள் 20 வயதுகளிலேயே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள் என்ற தன்னம்பிக்கைத் தகவலையும் தருகிறார்.
படிக்கும்போதே வேலை
"இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே சர்வதேச விமான நிலையத்தில் களப் பயிற்சி வழங்க உள்ளோம். பாடத்திட்டத்தின் அடிப்படையில் முதல் 6 மாதங்கள் மலேசியாவில் உள்ள யூனிகாம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவார்கள். அடுத்த 6 மாதங்கள் மலேசிய விமான நிலையத்தில் பணியோடு பயிற்சியினை தொடருவார்கள். அப்போது அவர்கள் கைநிறைய சம்பாதிப்பார்கள். மகிழ்ச்சியோடு அவர்களது வாழ்வாதாரமும் உயரும். இதனால் அவர்கள் தங்களது 20 வயதுகளிலேயே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்" என்று ஆர்.பூமிநாதன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் நாம் கண்டு வியந்த திறமைகள் ஏராளம். சாதாரணமான மாணவிகளையும் இவர்கள் தனித்துவம் பெற்றவர்களாக கல்வியாலும், பயிற்சி முறைகளாலும் பட்டைதீட்டியிருப்பதை காணமுடிகிறது. அவர்களது தோற்றப்பொலிவு, நடை, உடை, உடல்மொழி போன்றவை மெருகேற்றப்பட்டிருக்கிறது. ஆங்கில மொழித்திறனில் அவர்கள் அசத்துகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தை கையாளுவதிலும், ஆளுமைப் பண்பினை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் தன்னிகரற்று விளங்குகிறார்கள். அதனால் அவர்கள் மண்ணில் தயாராகி, விண்ணில் பறக்கிறார்கள்.
ஒவ்வொரு விடியலையும் மாணவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன், மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார். "உயரப் பறக்கலாம்.. உலகை வெல்லலாம்" என்பது அவரது தாரக மந்திரமாக இருக்கிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications