லீமா ரோஸ் மார்ட்டின் கொடுத்த ஷாக்! 4 எம்எல்ஏக்கள் மட்டுமே அவுட்.. எடப்பாடியிடம் தோற்ற ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு தவெக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.. கட்சித் தாவல் விவகாரங்கள், உள்கட்சிப் பூசல்கள் மற்றும் இடைத்தேர்தல் கூட்டணிகள் காரணமாக மாநில அரசியல் களம் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவேகா தரப்பில் நடத்தப்பட்ட பண பேரங்கள் மற்றும் அதிமுகவின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.
தாமோதரன் பிரகாஷ் News Time TN என்ற சேனலில் பேசும்போது, ""தவெக அரசுக்கு ஆதரவாக வாக்கு செலுத்திய அதிமுக எம்எல்ஏக்களில், 4 பேரை மட்டும்தான் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவால் தன் பக்கம் இழுக்க முடிந்தது.. ஆதவ் அர்ஜுனா பெரும் பண பலத்தைப் பிரயோகித்து, அந்த 4 எம்எல்ஏக்களையும் காசு கொடுத்து வாங்கி, அவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வைத்துள்ளார். அவர்கள் வரும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்..

ஆதவ் அர்ஜுனா தோல்வி
ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் இந்த கடுமையான பண வீச்சுக்கு அதிமுகவின் மற்ற எம்எல்ஏக்கள் பலியாகாமல், உறுதியாக அதிமுகவின் பின்னாடியே நிற்கிறார்கள்.. இதனால் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் தவேகா பக்கம் இழுக்க முடியாமல் ஆதவ் அர்ஜுனா தோற்றுப் போயுள்ளார்..
அதே நேரத்தில், அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் இடையேயான சண்டை இன்னமும் ஓயவில்லை.. சி.வி.சண்முகம் இன்னும் முழுமையாக எடப்பாடி பழனிசாமி அணிக்கு வரவில்லை.. அவர் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராகத் தொடர விரும்புகிறார்.. ஆனால், தனக்கு எதிராகச் செயல்பட்டதால் சி.வி.சண்முகத்தை மாற்றிவிட்டு, பசுபதியை மாவட்டச் செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே வேலை செய்துள்ளார்.
சிவி சண்முகம் பிடிவாதம்
இப்போது அந்த பசுபதியை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்றும், நான்தான் 7 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர் என்றும் சி.வி.சண்முகம் பிடிவாதம் பிடித்து வருகிறார்.
இருந்தாலும் எடப்பாடிக்கு எதிராக சபாநாயகரிடம் கொடுத்த புகாரை சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் வாபஸ் பெற்றுள்ளனர்.. தவெகவுக்கு ஆதரவாக வாக்கு செலுத்திய மொத்தம் 25 எம்எல்ஏக்களின் மனுக்களில், 4 பேர் ராஜினாமா செய்துவிட்டனர்.. 6 பேர் ஏற்கனவே எடப்பாடி பக்கம் சென்றுவிட்டனர்.. மீதமுள்ள 14 பேரும் மனு கொடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் ஆகியுள்ளனர்.. ஆனாலும் சண்டை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது..
லீமா ரோஸ் முக்கிய ரோல்
இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் லீமா ரோஸ்தான் ரொம்ப முக்கியமான பின்னணியாக உள்ளார்.. லீமா ரோஸ் முழுக்க முழுக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாளர்.. நிர்மலா சீதாராமனுக்கு ரொம்ப நெருக்கமான அவரைத்தான், வேலுமணி கொண்டு வந்து கட்சியில் சேர்க்கிறார்.. பிறகு லீமா ரோஸ்தான் இந்த கட்சி உடைப்பை ஏற்படுத்துகிறார். அதுவும் விஜய்க்கு ஆதரவாக.
ஆனால் அந்த உடைப்பை அவர்களால் தொடர முடியவில்லை.. முடியாது என்று தெரிந்தவுடன் வெறும் நாலு பேரை மட்டும் உடைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.. இப்போது அந்த 4 பேரும் இடைத்தேர்தலில் நிற்கிறார்கள்..
தவெக அரசுக்கு எதிர்ப்புகள்?
இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.. இந்த 4 பேர் நின்றால் நாங்கள் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிற்க வைத்து கண்டிப்பாகத் தோற்கடிப்போம் என்று சவால் விடுத்துள்ளார்.. இதன் மூலமாக தமிழக அரசியல் நிலைமை என்பது இப்போது தவெகவுக்கு எதிராக பெரிய அளவில் மாறியிருக்கிறது.
அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் விஜய்யைச் சந்திக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.. இப்படியொரு நிலையை எடுத்ததிலிருந்தே பாஜகவும் இப்போது இவர்களுக்கு எதிராக நிற்பது தெளிவாகத் தெரிகிறது.
இப்படி நித்தியகண்டம் பூரண ஆயுசாக, ஒரு அடி ஏறினால் மூன்று அடி சறுக்குவது போலத்தான் விஜய்யின் தற்போதைய நடவடிக்கைகள் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன" என்றெலாம் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications