அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திடீரென தவெகவில் இணைந்தது ஏன் என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக சிதறி சின்னாபின்னமாகிவிட்டதாக கூறிய அவர், அதிமுகவின் தோல்விக்கு கூட யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் சாடியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீரென தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார். ஓபிஎஸ் அணியுடன் நீண்ட ஆண்டுகளாக பயணித்து வந்த வெல்லமண்டி நடராஜன், திடீரென தேர்தலுக்கு முன் மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார். இருப்பினும் திருச்சியின் எந்த தொகுதியிலும் வெல்லமண்டி நடராஜனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Vellamandi Natarajan

இதனால் வெல்லமண்டி நடராஜன் தரப்பு அதிருப்தியில் இருந்தது. இந்த நிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சங்கடமாக உள்ளது.

அதிமுக 2 கோடி தொண்டர்களை கொண்ட எழுச்சிமிகு இயக்கம். ஆனால் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. 11 தோல்வியை அதிமுக அடைந்துவிட்டது. இதற்கு காரணம் யார்? மீண்டும் அதிமுகவை அரியணையில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு என்னை சார்ந்தது என்று யாருமே சொல்லவில்லை. இளைஞர்களை ஊக்குவித்து அதிமுகவில் இணைக்கும் சக்தியாக எம்ஜிஆர் இருந்தார்.

ஆனால் அதிமுகவில் இப்போது யாராக இருந்தாலும் நீக்கப்படுகிறார்கள். இப்படி ஒவ்வொரு நபரையும் மைனஸ் செய்து கொண்டே வந்தால், அதிமுகவிற்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் சொல்கிறது. லோக்சபா தேர்தலில் 80 லட்சம் வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றது. நாங்குநேரி இடைத்தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

எம்ஜிஆர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களை ஏற்றுக் கொண்ட தவெகவை மக்கள் ஆதரித்துள்ளார்கள். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தவெக வெற்றுள்ளது. மக்களால் விஜய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா, பெரியார் ஆகியோரின் புகழை பாடக் கூடிய தலைவராகவே விஜய்யை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+