சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என்னை விட்ற மாட்டார்னு நம்பினேன்.. இப்படி திருட்டு தாலி கட்டினா என்ன அர்த்தம்".. துரைமுருகன் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி மீது துரைமுருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "என்னை விட்டுவிட்டு அவர் கூட்டம் நடத்த மாட்டார்ன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்... காலைல வரைக்கும் நம்பிக்கையாதான் இருந்தேன்.. ஆனால், இப்படி திருட்டு தாலி கட்டினால் என்ன அர்த்தம்?... இதுவா நிர்வாகம்? இதுவா ஜனநாயக முறை? இதுவா நிர்வாக நடைமுறை?" என்று முதல்வர் எடப்பாடியாரை திமுக மூத்த தலைவர் துரைமுருகன் நேரடியாக சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Admk vs Bjp: வார்த்தை மோதலில் ஈடுபட்ட அதிமுக, பாஜக

    சட்டசபை தேர்தல் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தாலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த பணிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகவே இருக்கிறார். கொரோனா அரசியல் எந்த ரூபத்திலும் தலைதூக்கிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

    நேற்றுகூட, வேலூர் கலெக்டர் ஆபீசில் ஆய்வு கூட்டம் நடத்தினார்... வழக்கமாக ஆய்வு கூட்டம் என்றால் அனைத்து தரப்பையும் அழைத்துதான் கூட்டம் நடத்தப்படும்.. அவர்களின் கருத்தும் கேட்கப்படும்.. ஆனால், இந்த கூட்டத்துக்கு திமுக தரப்பில் ஒருத்தரும் அழைக்கப்படவில்லையாம்.

    அவங்களை விட.. அவங்களை விட.. "இவங்க" கூடத்தான் பாதி நேரம் இருக்கோம்.. இப்ப இது வேறயா.. ஜெர்மானியர்கள் சலிப்பு!

     துரைமுருகன்

    துரைமுருகன்

    இதை மூத்த தலைவர் துரைமுருகன் கொஞசமும் எதிர்பார்க்கவே இல்லை.. சொந்த தொகுதி அது.. எம்எல்ஏ, எம்பிக்கள் தங்கள் கட்சிக்கு இருந்தும் கூட்டத்துக்கு யாருமே கூப்பிடாதது அவருக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாகவே தெரிகிறது. அதுமட்டுமல்ல, நேரடியாகவே முதல்வர் மீதான தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார். இதை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையே போட்டு உடைத்துவிட்டார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    "எங்க மாவட்டத்துக்கு முதல்வர் வரப்போகிறார், ஆய்வுசெய்ய போகிறார் என்று கேள்விப்பட்டதுமே ரொம்ப சந்தோஷமானோம்.. ஆனா எங்களை கூப்பிடுவாங்கன்னு நினைச்சோம்.. நாங்க எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்.. இன்னைக்கு காலைல வரைக்கும்கூட ரொம்ப எதிர்பார்த்தோம்.. ஆனால் கூப்பிடவே இல்லை.

    அதிமுக

    அதிமுக

    ஒருவேளை அதிகாரிகள் மட்டத்தில் நடக்கிற ஆய்வாக இருக்குமோ, அதனாலதான் எம்பி, எம்ல்ஏக்களை கூப்பிடல போல என்று நினைத்தோம்.. அதுக்கப்பறம்தான், அதிமுகவை சேர்ந்த பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அழைத்து, அவர்களுக்கு இருக்கையும் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்.. ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டோம்.

    எம்எல்ஏக்கள்

    எம்எல்ஏக்கள்

    அரசாங்கத்துடைய நடைமுறைகளை மாநில முதல்வர் ஆய்வுசெய்வது தவறில்லைதான்.. அதுக்காக அதிமுக-வை சார்ந்த எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த கூட்டத்தை நடத்தியிருப்பதுதான் கண்டிக்கத்தக்கது... இந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை திமுக பிரதிநிதிகள்தான் அதிகமாக இருக்கோம்.

     இதுவா ஜனநாயகம்?

    இதுவா ஜனநாயகம்?

    முதல்வர் நடத்தியது ஆய்வுக்கூட்டமா, அதிமுக பொதுக்குழு கூட்டமான்னு தெரியல.. எங்களை திட்டமிட்டுதான் ஒதுக்கிட்டாங்க.. இதுவா நிர்வாகம்? இதுவா ஜனநாயக முறை? இதுவா நிர்வாக நடைமுறை? என்னை விட்டுவிட்டு அவர் கூட்டம் நடத்த மாட்டார்ன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஆனால், திருட்டு தாலி கட்டினால் என்ன அர்த்தம்?" என்று கொக்கரித்தார்.

     டாக்டர் விஜய்

    டாக்டர் விஜய்

    உண்மையிலேயே அதிமுக தரப்பு திமுகவை ஏன் அழைக்கவில்லை என்பது தெரியவில்லை.. ஆனால், சமீபத்தில்தான் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் அதிமுகவில் இணைந்தார்.. வேலூர் மாவட்டத்தில் அதிமுக-வை பலப்படுத்த புதிய புதிய வியூகம் எடுக்கப்பட்டு வருகிறது.. அதற்காகவே அமைப்புரீதியாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை 4-ஆகவும் பிரித்து மாநகர மாவட்ட செயலாளராக நியமனங்களும் நடந்தது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இந்தநிலையில், மாவட்ட செயலாளர் பதவியை குறி வைத்திருந்த முன்னாள் அமைச்சரான விஜய் அதிருப்தியில் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறி, சில நாட்களாகவே உள்ளடி வேலை பார்த்து வந்துள்ளதாகவும் அதிமுக தரப்பு கொந்தளித்தது.

     பரபரப்பு

    பரபரப்பு

    அதுமட்டுமல்ல, துரைமுருகனுடன்தான் எல்லா சீக்ரெட் பிளான்களையும் இவர் வகுத்து வந்ததாகவும், விஜய்யின் வீட்டுக்கு துரைமுருகனே நேரில் சென்று, அறிவாலயத்துக்கு அழைத்து சென்றதாகவும்கூட செய்திகள் அப்போது கசிந்தன... இப்படி வேலூர் மாவட்ட அதிமுகவே மொத்த அதிருப்தியில் இருக்கும்சூழலில்தான், துரைமுருகன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முதல்வர் மீது முன்வைத்துள்ளார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

    English summary
    dmk senior leader duraimurugan slams cm edapadi palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X