டெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்
சென்னை: டெல்லியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்தும் டிராக்டர் பேரணிக்கும் தமிழகத்தில் விவசாயிகள் நடத்தும் பேரணி, ஒன்றுகூடல்களுக்கும் திமுக முழு ஆதரவு தரும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஏறத்தாழ இரண்டு மாதங்களாகத் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு உறுதியுடன் போராடி வருகிறார்கள் விவசாயப் பெருங்குடி மக்கள். நாட்டின் திறன் காட்டும் வகையிலான அணிவகுப்பு நடைபெறும் குடியரசு நன்னாளில், நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள், தங்கள் வாழ்வுரிமைக்காக நடத்தும் டிராக்டர் அணிவகுப்பு அமைதியான முறையிலும் வெற்றிகரமாகவும் நடைபெற்றிட திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவினை வழங்குகிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் பல இடங்களிலும் பேரணிகள், ஒன்றுகூடுதல்களை நடத்த முடிவெடுத்துள்ளனர். 'நானும் விவசாயிதான்' என வேடமிடுவோரின் ஆட்சியில் விவசாயிகளின் உரிமைக்குரலுக்கு பல இடங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனினும், மாநில ஆட்சியாளர்கள்போல மத்திய அரசின் சட்டங்களுக்கு அடிபணிந்து போகாமல், தங்கள் உரிமைப்போராட்டம் தொடரும் என தமிழக விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு நன்னாளாம் ஜனவரி 26 அன்று தமிழகத்தில் நடைபெறும் விவசாயிகளின் ஜனநாயக வழியிலான பேரணி-ஒன்றுகூடுதல்களுக்கு தி.மு.கழகத்தினர் ஆதரவளிப்பதுடன், கழகத்தின் விவசாய அணியினர் அதில் பங்கேற்று வெற்றிபெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications