துணிக்கடையை விட அதிக கட்சி வேட்டிகளை வைத்துள்ளார்.. நிர்மல்குமாரை கலாய்த்த சூர்யா கிருஷ்ணமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தவெக திமுக இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ முதலமைச்சர் விஜ்ய் எந்த கருத்தும் கூறவில்லை. இதை திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். தங்களை விமர்சிப்பதற்கு திமுகவுக்கு தகுதியில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். நிர்மல் குமாருக்கு சூர்யா கிருஷ்ணமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "துணிக்கடையில் உள்ள கட்சி வேட்டிகளை விட, தன் வீட்டு அலமாரியில் அதிக கட்சி வேட்டிகளை வைத்துள்ளார் சி.டி.ஆர் நிர்மல்குமார். அவர் பரப்பிய வதந்தி, மாறிய கட்சி குறித்து சென்சஸ் தான் எடுக்க வேண்டும். வதந்தி பரப்புவதையும், கட்சி மாறுவதும் தான் அவரின் தகுதி. மின்சாரம், சட்டம் ஆகிய 2 துறைகளை அவர் கைவசம் வைத்துள்ளார்.

dmk-surya-krishnamoorthy-slams-minister-nirmalkumar-over-neet-exam

கோமாளித்தனமாக

மின்சாரத்துக்காக தமிழகம் முழுவதும் மக்கள் தினசரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மின்சார கட்டண உணர்வு, மின் வெட்டு எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் எங்கள் தலைவர்களுக்கான தகுதியை பற்றி பேசுகிறார். அவர்துறையில் உள்ள அரசு வழக்கறிஞர் பணியை ஆடி ஆபர் போல விற்றுள்ளனர். இதுகுறித்து நிர்மல்குமார் வாய் திறந்திருப்பாரா. இதை கட்டுப்படுத்த அவர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருப்பாரா.

இதுகுறித்து புரிதலோ, தகவலோ அவருக்கு வந்துள்ளதா. இதையெல்லாம் பேசாமல் எங்கள் தலைவரை பற்றி பேசுவது நகைச்சுவை. கோமாளித்தனமாக பேசியுள்ளார். ஒரு எம்எல்ஏ மீது பெண் பாலியல் பெண் புகார் கூறுகிறார். எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். மைதானத்தில் அமர்ந்து போதை மருந்து பயன்படுத்திய அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னொரு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிடுகிறார்.

பாஜகவை கண்டு பயம்

ஊரு எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு 10வது மாடியில் சொகுசாக அறை வேண்டும் என்கிற நிலையில் முதலமைச்சர் உள்ளார். இதுதான் கோமாளித்தனம். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் சமுதாயம் போராட்டம் நடத்தியுள்ளனர். இதைப்பற்றி வாயே திறக்காத முதலமைச்சர். பாஜக என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. கோவை, மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளனர். இதைப்பற்றியும் அவர் பேசவில்லை.

பாஜகவை கண்டிக்கிறேன், பாஜகவை எதிர்க்கிறேன் என்று முதலமைச்சரை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். பாஜகவை கண்டு தவெக, முதலமைச்சர் நடுங்குகிறார்கள். முதலமைச்சர் வெட்கமே இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்கிறார். அவரது அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதைப்பற்றி தெரியாத முதலமைச்சர் 10வது மாடிக்கு சிட்டி வியுவில் அன் அறையை மாற்றுகிறார். எதிர்க்கட்சியினரை பற்றி பேசுவதை நிறுத்தி மக்கள் பணியாற்றுவது நல்லது.

நிர்மல்குமாருக்கு மதிப்பில்லை

திமுகவை யார் வழிநடத்துவது என்று எங்களுக்கு தெரியும். 75 வருடமாக திமுக கம்பீரமாக நிற்கிறது. எங்களுக்கு யாரும் கட்டமைப்பு குறித்து கிளாஸ் எடுக்க வேண்டாம். தவெக ஆட்சி போனால் எத்தனை பேர் அந்த கட்சியில் இருப்பார்களா. நிர்மல்குமாருக்கு தவெகவில் மதிப்பில்லை. மதுரையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தவெக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. முதலில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+