ரூ.1000 + 6000 + 1000.. அடுத்தடுத்து கொட்டும் பணமழை! ஸ்டாலின் இறக்கிய திட்டம்! திமுக எடுக்கும் சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக பல்வேறு சர்வேக்களை எடுக்க தொடங்கி உள்ளது. அதில் சமீபத்தில் புதிய சர்வே பணிகள் ஒன்று தொடங்கி உள்ளதாம்.
லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கிவிட்டது.

சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் திமுக சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த சர்வேபடி நேரடியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சர்வே எடுப்பார்கள்.
அவர்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.
எம்பிக்கள்: லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.
40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலாம் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கனிமொழி, ஆ ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் , டி ஆர் பாலு உள்ளிட்ட 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். மக்கள் இடையே பிரபலம் இல்லாத 10 பேருக்கு வாய்ப்பு இல்லை. கூட்டணியில் ஏற்கனவே எம்பியாக இருக்கும் நபர்களில் 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூட்டணி கட்சிகளுக்கு திமுக சொல்லும் என்று தகவல்கள் வருகின்றன. திமுக உள்வட்டார சர்வே மூலம் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
புதிய சர்வே: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. அதில் சமீபத்தில் புதிய சர்வே பணிகள் ஒன்று தொடங்கி உள்ளதாம். அதன்படி சமீபத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நிவாரணமாக ரூ. 6000 வழங்கப்பட்டது.
அதேபோல் பெண்களுக்கு ரூ. 1000 கலைஞர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இது போக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகள் மக்கள் இடையே எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இதனால் பயன் அடைந்தது எப்படி என்பது தொடர்பான சர்வேவை தமிழ்நாடு அரசு எடுக்க உள்ளதாம்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications