தமிழகம்: திமுக- 84; அதிமுக-81; காங்.- 11; பாமக 9; பாஜக 5 : ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா எக்ஸிட் போல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அணி 111 இடங்களிலும் அதிமுக கூட்டணி 97 இடங்களிலும் வெல்லும் என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் யூ டியூப் சேனலான சாணக்யாவின் நேற்றைய எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களைத் தாண்டி அதிகபட்சமாக 195 இடங்கள் வரை வெல்லும் என்பது பொதுவான கருத்து கணிப்புகளின் முடிவுகள். அதிமுக கூட்டணி 40 முதல் 70 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன கருத்து கணிப்பு முடிவுகள்.

திமுக 109; அதிமுக 101
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனலும் ஒரு எக்ஸிட் போல் முடிவை வெளியிட்டது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அந்த எக்ஸிட் போல் முடிவுகளில், திமுக கூட்டணி 109; அதிமுக கூட்டணி 101 இடங்களில் வெல்லும் என்றும் இழுபறியாக 24 தொகுதிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்குதான் மு.க.ஸ்டாலினைவிட அதிக ஆதரவு இருக்கிறது என்றும் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் எக்ஸிட் போல் தெரிவித்தது.

திமுக அணி 111;அதிமுக அணி 97
இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற முடிவுகளையும் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் வெளியிட்டது. அதில் திமுக கூட்டணிக்கு 111 இடங்களும் அதிமுக அணிக்கு 97 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சாணக்யா யூ டியூப் சேனல் முடிவுகளின் படி கட்சிகளுக்கான இடங்கள்.

பாமக 9; பாஜக 5
அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டும் 81 தொகுதிகளில் வெல்லுமாம். அந்த கூட்டணியில் இடம்பெற்று 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 9 இடங்களிலும் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 இடங்களிலும் வெல்லுமாம். தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் கிடைக்குமாம்.

திமுக 84; அதிமுக 81
திமுக கூட்டணியில் திமுக மட்டும் 84 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாம். காங்கிரஸ் கட்சி இந்த முறை 11 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடும். இதற்கு அடுத்ததாக சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள் தலா 3 இடங்களில் வெல்லுமாம். தனி சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி உறுதியாம். மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவையும் தலா 2 இடங்களில் வெற்றி பெறுமாம். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வார்ட் பிளாக் ஆகியவை தலா 1 இடத்தில் வெல்லுமாம்.

26-ல் இழுபறியாம்
இவை போக எஞ்சிய 26 தொகுதிகள் இழுபறியாக இருக்கின்றனதாம். இந்த 26 தொகுதிகளைப் பொறுத்துதான் திமுக, அதிமுக அணியின் வெற்றி உள்ளதாம். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரங்கராஜ் பாண்டே, 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் போன்ற ஒரு நிலைமை வரலாம்; அல்லது 2016 முடிவுகள் இம்முறை தலைகீழாகவும் வரலாம் எனவும் குறிப்பிட்டார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications