சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - 500 வாக்குறுதிகளுடன் ஸ்டாலின் வெளியிட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பின்னர், மே 2ஆம் தேதி புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக களமிறங்குகிறது. அதேபோல திமுக அணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த முறை சுமார் 170க்கும் மேற்பட்ட இடங்களிலும் திமுகவும் அதிமுகவும் போட்டியிடுகின்றன.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வரும் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதேபோல திமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பின்னர், நேற்று தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

ஸ்டாலினும் உதயநிதியும்

ஸ்டாலினும் உதயநிதியும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 10ஆவது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். மறைந்த திமுக பொதுச்செயலாளர் க அன்பழகனின் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கத்தில் போட்டியிடுகிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியில் களமிறங்குகிறார்.

கேம் சேஞ்சர்

கேம் சேஞ்சர்

இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வேட்பாளர் பட்டியில் வெளியாகும்போதே, அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இதை உறுதி செய்தார். கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இலவச டிவி, இரண்டு ரூபாய்க்கு அரிசி ஆகிய அறிவிப்புகளுடன் வெளியான திமுகவின் தேர்தல் அறிக்கை, சட்டபை தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை

அதேபோல இந்த முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கை மீது பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். கடந்த 2016ஆம் தேர்தலிலேயே மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது வெளியான தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

English summary
DMK releases the election manifesto today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X