சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினின் நல்ல சாய்ஸ்.. கலக்கலான அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்.. பஸ் டிக்கெட் விலை உயர போகிறதா?

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "அதிமுக அரசால் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளேன்.. டீசல் விலை உயர்ந்தாலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை.. நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதை பற்றி முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தன்னை நாடி வந்து கட்சியில் இணைந்தவர்களை எப்போதுமே கைவிடுவதில்லை என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறார் முக ஸ்டாலின். அந்த வகையில், அதிமுகவுக்கும் திமுகவுக்குமாக "போக்குவரத்தில்" இருந்த ராஜகண்ணப்பனுக்கு மறுபடியும் போக்குவரத்து துறையே வழங்கப்பட்டுள்ளது.

பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அறிவித்தவுடனேயே அது பலதரப்பட்ட மக்களின் வரவேற்பை பெற்றது.. பிறகு, அடுத்தடுத்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார் கண்ணப்பன்..

தூத்துக்குடி அருகே.. தோண்ட தோண்ட பிரமிப்பு.. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி.. தமிழ் பிராமி எழுத்துதூத்துக்குடி அருகே.. தோண்ட தோண்ட பிரமிப்பு.. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி.. தமிழ் பிராமி எழுத்து

 சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்... பேருந்து வழித்தடங்களை மக்கள் அறிந்துகொள்ள சலோ ஆப் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். சென்னையில் 1400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.. என்ற அறிவிப்புகள் மக்களை அசரடித்தன.

 பேட்டி

பேட்டி

இப்போது மறுபடியும், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் கண்ணப்பன்.. தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஸ்களில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் தெளிவுரையும் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.. ஒவ்வொரு பேருந்துகளிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது..

 கஜானா காலி

கஜானா காலி

மேலும், 31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளது.. அதிமுக அரசால் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளேன்.. டீசல் விலை உயர்ந்தாலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை..

 இலவச பஸ் பயணம்

இலவச பஸ் பயணம்

இப்போது இயக்கப்படும் பஸ்களில் 6262 பேருந்துகள் சாதாரண பேருந்துகள், பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு டிக்கெட் வழங்கவும் தனியாக புதிய வண்ணத்தில் டிக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது, நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதை பற்றி முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. 500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள் மற்றும் 2000 டீசல் பேருந்துகள் வாங்கவும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்றார்.

 அதிரடிகள்

அதிரடிகள்

பல துறைகளில் அதிரடிகளை அந்தந்த துறை அமைச்சர்கள் கையில் எடுத்து வரும்நிலையில், கண்ணப்பனும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.. அமைச்சரின் இந்த அறிவிப்புகள், தமிழ்நாடு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. காரணம், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தமிழக அரசு இருக்கிறது... இதை பற்றி முதல்வரே பலமுறை தெரிவித்துள்ளார்.. அப்படி இருந்தும், நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது பாராட்டத்தக்கது என்கிறார்கள்.

 அக்கறை

அக்கறை

அதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல் உயர்ந்தால், பேருந்து கட்டணத்தை உடனடியாக உயர்த்திவிடுவது அந்தந்த அரசு மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளாகும்.. ஆனால், இப்போது கொரோனா காலத்தில் அப்படி எதுவும் சாக்கு சொல்லாமல், மக்களின் தலையிலும் இடியை போட்டுவிடாமல், பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று அறிவித்திருப்பது உண்மையிலேயே மக்கள் மீது திமுக அரசுக்கு இருக்கும் அக்கறையையே காட்டுகிறது என்ற கருத்துக்களும் பெருகி வருகின்றன.

English summary
DMK transport minister Raja Kannappans new announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X