அம்மா, அப்பா இல்லை; ஆதரவற்ற பிள்ளைகள்! - வீடுகளைக் கட்டித் தந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: ஓர் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதைப் பொதுமக்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் தெரியுமா? அதன் வெளிப்படைத்தன்மையை வைத்துத்தான். அந்தளவுக்கு அரசு நிர்வாகம் திறந்த புத்தகம்போல் இருக்க வேண்டும். அப்படியொரு காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது.
அதாவது, முதல்வரின் முகவரிக்கு எத்தனை மனுக்கள் வந்துள்ளன? அதில் எவ்வளவு மனுக்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன? என்பதை வெளிச்சம் போட்டும் காணொளியைத்தான் அவர் தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
திட்டங்களை அறிவிப்பதோடு, தொடங்கி வைப்பதோடு நின்றுவிடாமல், செயல்பாட்டுக்கு வருவதையும் உறுதி செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தலைமை இடைவிடாமல் இயங்கினால்தான் அடிமட்டத்தில் உள்ள அதிகாரிகளும் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். அந்தவகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த ஈடுபாடு கவனம் பெறுகிறது.

தீர்வைக் கொடுத்த முதல்வரின் முகவரி
ஒவ்வொரு துறைவாரியாக அதிகாரிகளை அழைத்து, உங்களுக்கு வந்துள்ள மனுக்களில் 99 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறீர்கள்? மீதி இருக்கும் 1 சதவீதம் ஏன் நிறைவேற்றப்படவில்லை. அதைச் செய்ய முடியாததற்கு என்ன காரணம்? எங்கள் தரப்பிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவையா.. அல்லது விரைந்து முடிக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?' என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்தார்.
அந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளும் அதற்கான காரணத்தை விளக்கிக் கூறுகின்றனர். விரைவில் முடிக்க வேண்டுகிறேன். சிறப்பாகச் செய்ததற்கு வாழ்த்துகிறேன் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார் ஸ்டாலின்.
இதற்கு முன்னால் இருந்த முதலமைச்சர்கள் இவ்வாறு செயல்பட்டுள்ளார்களா?' என விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால், தொழில்நுட்ப வசதியால் ஓர் அரசு இயந்திரம் எந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார் என இதை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ரேணுகா பாட்டியின் சோகக் கதை
தலைமை இடைவிடாமல் இயங்கினால்தான் அடிமட்டத்தில் உள்ள அதிகாரிகளும் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். அந்தவகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த ஈடுபாடு கவனம் பெறுகிறது.
தற்போது, கஜா புயலால் உருக்குலைந்த தஞ்சாவூர் மாவட்டம் களத்தூரில் உள்ள ஒரு குடும்பத்தைப் பற்றிய செய்தியைத்தான் பார்க்கப் போகிறோம். இந்தப் பகுதியில் கஜா புயலால் பலர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். அதில் பல குடும்பங்களுக்கு திமுக அரசு உறுதுணையாக நின்றிருக்கிறது.
களத்தூரில் ரேணுகா என்ற பாட்டி வசிக்கிறார். இவருக்கு ஆண், பெண் என்று இரண்டு வாரிசுகள். பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டார். ஆனால், மகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். மருமகன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார்.
இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பெயர், சந்தோஷ். இவருக்கு இருபது வயதாகிறது. இன்னொரு பேரன் விஷ்ணுவர்தன் காரைக்குடியில் படித்து வருகிறார். இப்படி கஷ்டத்தில் தவிக்கும் இந்தக் குடும்பத்துக்கு பாட்டி ஒருவர்தான் நிதி ஆதாரம். அரசு சார்பில் வழங்கப்படும் 100 நாள் வேலைக்குச் சென்று இந்தப் பாட்டி, தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
தற்போது பாட்டியுடன் வசிக்கும் விஷ்ணுவர்தன் கூறுகையில், என் அப்பா, அம்மா இறந்து இரண்டு வருஷம் ஆகின்றன. எங்களைப் பாட்டிதான் பார்த்துக் கொள்கிறார். பாட்டி வீட்டில்தான் இருக்கிறோம். கஜா புயலில் வீடு முழுவதும் உடைந்துவிட்டது. நாங்கள் வசிப்பதற்கு வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அதிகாரிகளும் வந்து பார்த்தார்கள். இந்த வீட்டுக்குப் பட்டா எதுவும் இல்லை. அதையும் கேட்டிருக்கிறோம் என்கிறார்.

பசுமை வீடுகளால் கிடைத்த உற்சாகம்
இந்த வேலைகளை முன்னின்று செய்தவர் ஸ்டாலின் பீட்டர் பாபு. இவர் இந்த மாவட்டத்தில் உள்ள அரிமா சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் இதுகுறித்துப் பேசுகையில், இந்த இளவயதில் இந்தப் பையன்களால் வீட்டைக் கட்ட முடியாது. அந்தளவுக்கான பொருளாதாரம் அவர்களிடம் இல்லை. நமக்கு வீடு என்பதுதான் பாதுகாப்பான விஷயம். அந்த அடிப்படை வசதிகூட இல்லை என்றால் அவர்களின் மனநிலை எந்தளவுக்குப் பாதிக்கப்படும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
நமக்கென்று ஒரு வீடு இருந்தால்தான் நம்பிக்கையோடு வெளியே போக முடியும். நம்பிக்கையோடு வாழ முடியும். அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார் என்கிறார்.
இதேபோல் இரட்டை வயல் கிராமத்தில் பாண்டி மீனாள் என்பவர் வசிக்கிறார். இவரின் தங்கை ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களுக்கும் வீடு கட்டி தந்துள்ளோம். இவரைப் போலவே, காடந்தங்குடி சுந்தரவதனி என்பவர் பெற்றோரை இழந்துவிட்டார். அவருக்கும் வீடு இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தார். அரசுத் திட்டத்துடன் இணைந்து வீடு கட்டும் பணிகளைச் செய்து முடித்துள்ளோம் என்கிறார், ஸ்டாலின் பீட்டர் பாபு.

கலெக்டர் கொடுத்த நம்பிக்கை
இந்த வீடு வந்த பிற்பாடுதான் மனசுக்கு நிம்மதி வந்திருக்கிறது என்கிறார் ரேணுகா பாட்டி. இவரைப் போலவே விஷ்ணுவும், வீடு திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வந்திருந்தார். அப்போது அவர், 'நீ படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்குச் சென்று சம்பாதித்து இதேபோல் மற்ற ஏழைகளுக்கும் உதவ வேண்டும் என்றார். அவரது நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன் என்கிறார்.
எனக்கு அப்பா அம்மா இல்லை. என் தங்கை ஒரு மாற்றுத்திறனாளி. அம்மாவுக்குக் கடந்த 5 வருடங்களாக கல்லீரல் கெட்டுவிட்டது. அவர் இறப்பு எங்கள் குடும்பத்தைக் கடுமையாகப் பாதித்துவிட்டது என்கிறார் பாண்டி மீனாள்.
முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டம் மூலமாக இவர்களுக்கு வீடு கட்டித் தந்துள்ளோம். அதுவும் ஆதரவற்ற இளைஞர்களான இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தோம். அரசு நிதியைத் தாண்டி கூடுதலாக நிதி தேவைப்பட்டது. அப்போது ஆட்சியர் நிதியிலிருந்தும் மற்றொரு பகுதியை தன்னார்வலர்களின் பங்கில் இருந்தும் பெற்றுக் கட்டித்தருகிறோம் என்கிறார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications