சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களை மொத்தமாக வாரி சுருட்டிய திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, என 9 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

செங்கல்பட்டு, தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை , விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது.

முதல்வர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை.. ஒரு வார்த்தை கூட பேசாத இபிஎஸ்.. ஏன்? என்னாச்சு?முதல்வர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை.. ஒரு வார்த்தை கூட பேசாத இபிஎஸ்.. ஏன்? என்னாச்சு?

சென்னையில் உள்ள 16 தொகுதியிலும் திமுக கூட்டணி வென்றது. இதில் தி.நகர், இராயபுரம், ஆர்கே நகர், மயிலாபூர் போன்றவை அதிமுகவிற்கு மிகவும் சாதகமான தொகுதிகள் ஆகும். அங்கும் தற்போது திமுகவே வென்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்பட 4 தொகுதியிலும் திமுகவே வென்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியே வென்றது. மதுராந்தகத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் என 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

கரூர்

கரூர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் உள்பட திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் தொகுதியிலும் திமுகவே வென்றது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் திமுகவே வென்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி(தனி) ஆகிய 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்பட 7 தொகுதிகளில் திமுக கூட்டணியே வென்றது. ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி உள் 6 தொகுதிகளில் திமுக கூட்டணியே வென்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. விராலிமலையில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.

English summary
DMK has won in all the constituencies in 9 districts namely Chennai, Kanchipuram, Tiruvallur, Ramanathapuram, Trichy, Perambalur, Ariyalur, Karur, Mayiladuthurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X