தமிழன் பிரச்சன்னாவின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - பிறந்தநாளில் சோகம்
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துக்கொண்டது பற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. ஊடக விவாதங்களில் பங்கேற்று பேசி வருவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடி எடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி நதியா இன்று காலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழன் பிரசன்னாவிற்கும் நதியாவிற்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிகிறது. 35 நதியாவிற்கு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனை தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் சண்டை ஏற்படவே அவர் தனது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை மேற்கொண்டனர். நதியாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications