• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடித்து தூக்கிய ஸ்டாலின்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. அலறும் காங்,.. கூலாக வேடிக்கை பார்க்கும் பாஜக

|

சென்னை: சைலண்ட்டாக ஒரு வேலையை காய் நகர்த்தி கனகச்சிதமாக நடத்தி முடித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. இதை பாமக கூட எதிர்பார்க்கவில்லை.. இதனால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநில அரசியல் வரை பரபரப்பு கிளம்பி உள்ளது.

இந்த முறை தேர்தலில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது.. அதனால்தான் கட்சிக்குள் எத்தனையோ அதிருப்திகளையும் மீறி, ஐபேக் டீமின் ஆலோசனைபடியே நடந்து கொண்டு வருகிறது.

ஸ்டாலினை முதல்வராக்குவது என்று வைராக்கியத்துடன்தான் ஐபேக் டீமும் களமிறங்கி உள்ளது.. அதனால்தான் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே போட்டியிட வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளைக் கூட, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட சொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இது சம்பந்தமான எந்த ஒரு இறுதி முடிவையும் திமுக தலைமை எடுக்கவில்லை.

 ஜெகத் ரட்சகன்

ஜெகத் ரட்சகன்

அரக்கோணம் எம்பி ஜெகத்ரெட்சனை புதுச்சேரியில் நிறுத்த காரணம், இவர் ஒரு வன்னியர்... ஜெகத்ரட்சகனை தவித்துவிட்டு, திமுகவை பார்க்க முடியாது.. கட்சியில் வலுவானவர்.. தொகுதியில் செல்வாக்கானவர்.. எல்லாவற்றையும் விட நல்ல பசையானவர்.. பாண்டிச்சேரியை பொறுத்தவரை 60 சதவீதத்துக்கும் மேல் அங்கு வன்னியர்கள்தான் உள்ளனர்.. அதனாலேயே ஜெகத்தை களமிறக்கி உள்ளார் ஸ்டாலின்.

 நாராயணசாமி

நாராயணசாமி

அங்கு தனித்து போட்டியிட முடிவு செய்து ஜெகத்ரட்சகனையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவுள்ளது திமுக. இதற்கு காரணம், நாராயணசாமிக்கு சொந்த மாநிலத்தில் உரிய மரியாதை இல்லை.. இந்த 4 வருஷத்தில் கிரண்பேடி அரசுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை மேற்கொண்டு நாராயணசாமியின் இமேஜை நொறுக்கிவிட்டார்.. அதேபோல, மத்தியில் ஆளும் பாஜக மீதும், தமிழகத்தை ஆளும் அதிமுக மீதும் அதிருப்திகள் உள்ளன.. காங்கிரஸும் தேய்ந்து கொண்டு வருவதால், திமுக இதை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது.

 ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சனை புதுச்சேரியில் நிறுத்த காரணம், இவர் ஒரு வன்னியர்... ஜெகத்ரட்சகனை தவிர்த்துவிட்டு, திமுகவை பார்க்க முடியாது.. கட்சியில் வலுவானவர்.. தொகுதியில் செல்வாக்கானவர்.. எல்லாவற்றையும் விட நல்ல பசையானவர்.. பாண்டிச்சேரியை பொறுத்தவரை 60 சதவீதத்துக்கும் மேல் அங்கு வன்னியர்கள்தான் உள்ளனர்.. அதனாலேயே ஜெகத்தை களமிறக்கி உள்ளார் ஸ்டாலின்.

 3 மாங்காய்

3 மாங்காய்

ஒருவேளை புதுச்சேரியில் 4 முனை போட்டியே வந்தாலும்கூட, ஜெகத் சுலபமாகவே ஜெயித்து விடும் கணக்கை படுசாமர்த்தியமாக வகுத்து வருகிறது.. இதன்மூலம் ஒரே கல்லில் 3 மாங்காயை ஸ்டாலின் அடித்துள்ளார்.. ஒன்று, பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடிப்பது, மற்றொன்று, தமிழகத்திலும் காங்கிரஸுக்கு குறைவான தொகுதி அல்லது கழட்டிவிடுவது, மூன்றாவது பாஜகவின் அதிருப்தியில் இருந்து தப்பிப்பது!

 அதிருப்தி

அதிருப்தி

3 மாதங்களுக்கு முன்பே ஒரு செய்தி கசிந்தது.. எதுக்காக இந்த காங்கிரஸை கட்டிக் கொண்டு அழ வேண்டும், திமுகவால்தான் காங்கிரஸ் பிழைத்து கொண்டிருக்கிறது, நீங்கள் இல்லையென்றால், அவர்களுக்கு கொஞ்சமும் செல்வாக்கு இருக்காது, நீங்கள் எங்களுடன் இணையாவிட்டாலும் பரவாயில்லை, காங்கிரஸை கழட்டி விடுங்கள் என்று திமுகவுக்கு பாஜக தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதால், திமுகவுக்கு இப்படி ஒரு அட்வைஸை தந்ததாக சொல்லப்பட்டது. அதைதான் இப்போது திமுக கையில் எடுத்திருக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது..

 வன்னியர்கள்

வன்னியர்கள்

உண்மையில் இந்த திட்டத்தை பாமகதான் கையில் எடுத்திருக்க வேண்டும். பாமகவுக்கு புதுச்சேரியிலும் ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. புதுச்சேரியில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக இறக்கி விட்டு அதிரடியாக பாமக ஏதாவது விளையாட்டு காட்டியிருக்கலாம்.. ஆனால் இதுவரை அந்த யோசனைக்கே அது போகாமல் இருக்கிறது. ஆனால் திமுக அதிரடி காட்டி விட்டது.

 சோனியா காந்தி

சோனியா காந்தி

திமுகவின் இந்த அதிரடிகள் சோனியா காந்திக்கு, ராகுல் மூலம் புகாராக சென்றிருந்தாலும், ஸ்டாலின் தன் முடிவில் படு ஸ்டிராங்காக உள்ளதாக கூறப்படுகிறது. பார்ப்போம்.. இந்த புது விளையாட்டு யாருக்கு லாபம் தரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
English summary
DMKs Master Strategy in Puducherry Assembly Election
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X