சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சீக்ரெட்".. ஒருத்தரையும் காணோமாம்.. கே.சி. வீரமணியிடம் ரெய்டு.. அதிமுகவினர் எங்கே போனார்கள்

கேசி வீரமணியிடம் ரெய்டு குறித்து ஜெயக்குமார் திமுகவை சாடியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 4 இடங்களில் ரெய்டு நடந்து வந்தாலும், கேசி வீரமணிக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுகவினர் யாருமே வரவில்லை.. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒருவரையும் சென்னையில் காணோமாம்.. என்ன காரணம்?

Recommended Video

    கே.சி. வீரமணி மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் - வழக்கறிஞர் செல்வம்

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோதே, அடுத்தது யாருக்கு குறி என்ற கேள்வி எழுந்தது? இதையொட்டி 2 மாஜிக்களின் பெயர்களும் அடிபட்டன.

    ஆனால், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில், எப்படியும் யார் மீதும் ரெய்டு நடவடிக்கை பாயாது என்றே யூகிக்கப்பட்டிருந்தது..

    வேலுமணி ரெய்டில் கற்ற பாடம்.. கே.சி.வீரமணிக்கு எதிராக நடந்த ரகசிய ஆபரேஷன்.. தொண்டர்களுக்கு டிமிக்கிவேலுமணி ரெய்டில் கற்ற பாடம்.. கே.சி.வீரமணிக்கு எதிராக நடந்த ரகசிய ஆபரேஷன்.. தொண்டர்களுக்கு டிமிக்கி

     மாஜிக்கள்

    மாஜிக்கள்

    அதன்படியே கூட்டத்தொடர் முடிந்த நிலையில், மாஜிக்கள் மீதான ரெய்டுகள் ஆரம்பமாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் வீரமணியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் குறி வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.. விடிகாலையிலேயே ரெய்டு ஆரம்பமாகிவிட்டது.. சென்னை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கேசி வீரமணி உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..

     அதிகாரிகள்

    அதிகாரிகள்

    அதேபோல, சென்னை சாந்தோமில் உள்ள கேசி வீரமணி வீட்டிலும், அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுகிறது. வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள இவருடைய இல்லத்தில் சோதனை நடக்கிறது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் வீரமணிக்கு சொந்தமான ஸ்டார் ஹோட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...

    அதிமுகவினர்

    அதிமுகவினர்

    இப்போது இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சென்னையில் மட்டும் 4 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.. ஆனால், அதிமுகவினர் யாரையுமே அங்கே காணோம்.. இதுவே, எஸ்.பி.வேலுமணியிடம் ரெய்டு நடந்தபோதே, மொத்த பேரும் திரண்டு கோவை வீட்டிற்கு படையெடுத்தனர்..

     வேலுமணி

    வேலுமணி

    மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை வேலுமணிக்காக குரல் கொடுத்தனர்.. அதுவும் காலை 6 மணிக்கே தொண்டர்கள் குவிந்துவிட்டனர்.. இப்படி அனைவரையுமே திரட்டி வந்து ஆதரவு சொன்னதே வேலுமணிதானாம்.. இதற்கு காரணம், ரெய்டு நடக்க போகும் விஷயம், வேலுமணிக்கு முன்னமேயே தெரிந்திருந்ததுதான்.

     ரெய்டு

    ரெய்டு

    அதனால்தானோ என்னவோ, இந்த முறை கேசி வீரமணியிடம் ரெய்டு நடத்துவதை அதிகாரிகள் கடைசிவரை கமுக்கமாகவே வைத்திருந்தனர்.. திடீரென்றுதான் ரெய்டு நடத்தியுள்ளனர்.. ஆனால், 6 மணிக்கு பிறகு ரெய்டு பற்றின செய்திகள் வெளிவந்தபிறகும்கூட, அதிமுகவினர் யாருமே வரவில்லை.. ரெய்டுக்கு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.. குறைந்தபட்சம் வீரமணிக்கு ஆதரவுகூட தரவில்லை. எல்லாரும் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பதுதான் மிகப்பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.

     திமுக

    திமுக

    ஒருவேளை, வீரமணிக்கு ஆதரவு தந்தால் தாங்களும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பதால் ஒதுங்கி உள்ளனரா? அல்லது யாரும் ஆதரவு தர செல்லக்கூடாது என்று மேலிடம் உத்தரவு ஏதேனும் பிறப்பித்துள்ளதா? அல்லது வீரமணிக்கான செல்வாக்கு கட்சிக்குள் குறைந்துவிட்டதா என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த ரெய்டு விவகாரம் வீரமணிக்கு பெருமளவு சிக்கல்களை தருமா? திமுக கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளுமா? என்ற சந்தேகமும் உள்ளது... பார்ப்போம்..!

    English summary
    DMKs next target and Why the ADMK Cadres didnt support Ex Minister KC Veeramani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X