அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியில் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அதிருப்தி தெரிவித்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கள் உள்ளிட்டோர் சட்டசபையில் விஜய் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர்.

Vellamandi Natarajan Joins TVK

தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்

இதனால் விஜய்யின் அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் அதிமுகவில் இருந்து யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்காததால் எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்து மீண்டும் எடப்பாடி பக்கம் தாவ தொடங்கினர். இதற்கிடையே எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்து இசக்கி சுப்பையா உள்பட 4 பேரு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.

இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

யார் இவர்?

கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது கட்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த திருச்சி கிழக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் வெற்றி பெற்றார். அப்போது அவர் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு எடப்பாடி தலைமையை விரும்பாத இவர் ஓ பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்தார்.

2026 சட்டசபை தேர்தலின் போது ஓ பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். இதனால் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து ஒருவர் பின் ஒருவராக தவெகவில் இணைந்து வரும் சூழலில் வெல்லமண்டி நடராஜனும் தவெகவில் இன்று இணைந்துள்ளார்.

திருச்சி கிழக்கில் போட்டியா?

வெல்லமண்டி நடராஜன் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது தவெகவில் இணைந்துள்ள சூழலில், விரைவில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெல்லமண்டி நடராஜனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் இந்த தொகுதி மீதான கவனம் அதிகரித்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உள்ளிட்டோர் பெயரும் வேட்பாளர்களாக நிறுத்தப்படும் நபர்களின் பெயராக அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+