நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தண்ணீரிலேயே ஓடும் இந்தியாவின் சூப்பர் ரயில்! சென்னை ICF சர்ப்ரைஸ்
சென்னை: இந்திய ரயில்வேயை அடுத்த லெவலுக்கு கொண்டு போக மத்திய அரசு இப்போ சூப்பரான ஒரு பிளானை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, புகையே வராமல் வெறும் தண்ணீரை மட்டும் ஆவியாக வெளியிடும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னை ஐசிஎப் தொழிற்சாலையிலேயே தயாரித்து இப்போது தயாராகிவிட்டதாம்.. ஹரியானாவின் ஜிந்த் டூ சோனிபட் வழித்தடத்தில் விரைவில் ஓடப்போகும் இந்த ரயிலின் மூலம், உலக அளவில் மிகக் குறைந்த நாடுகள் வைத்துள்ள இந்த எக்கோ பிரெண்ட்லி தொழில்நுட்ப பட்டியலில் இந்தியாவும் இப்போது கெத்தாக இணைந்துள்ளது.. இதை பற்றி இங்கே பார்ப்போம்..!!
மத்திய அரசு இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிலும் இன்றைய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றுவது, எரிபொருள் செலவைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

"ஹைட்ரஜன் ரயில்" - மத்திய அரசு திட்டம்
அந்த வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் மற்றும் பாரத் ரயில்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த அதிநவீன ரயில்களின் வரிசையில், இப்போது சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைக்கும் நோக்கில் "ஹைட்ரஜன் ரயில்" என்ற புதிய புரட்சிகரமான திட்டத்தை மத்திய ரயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.
நீராவியை உமிழும் ரயில்
சாதாரண ரயில்கள் டீசலில் இயங்கும்போது கரும்புகையை வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. ஆனால், இந்த ஹைட்ரஜன் ரயில் டோட்டலாக மாறுபட்டது. இந்த ரயில் இயங்கும்போது புகைக்கு பதிலாக வெறும் நீராவியை மட்டுமே உமிழுமாம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில், உள்நாட்டிலேயே 35 ஹைட்ரஜன் ரயில்களைத் தயாரிப்பதற்காக சுமார் 2,300 கோடி ரூபாய் நிதி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐசிஎப் எனப்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த அதிநவீன ஹைட்ரஜன் ரயிலைத் தயாரிக்கும் பணிகள் கடந்த ஆண்டு விறுவிறுப்பாகத் தொடங்கின.
சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சபாஷ்
மொத்தம் 10 பெட்டிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் எஞ்சின் சோதனை ஓட்டம் சமீபத்தில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள் குழுவினர் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில், இந்த ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் சீரான வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து, ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படவுள்ள நாட்டின் இந்த முதல் ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பு மையம்
இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் நகரில் இருந்து சோனிபட் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஹரியானாவின் ஜிந்த் நகரில் 3000 கிலோ கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக, 1200 கிலோவாட் திறன் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சின் இந்த 10 பெட்டிகள் கொண்ட ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த டெக்னாலஜி மூலம் இந்த ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறனைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ரயில்வே - மின்சாரம் உருவாக்குகிறது
இந்த ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பமானது, ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஒரு வேதியியல் எதிர்வினை மூலம் மின்சாரத்தை உருவாக்குகிறது. இதில் கழிவாக வெறும் நீர் மற்றும் நீராவி மட்டுமே வெளியேறுவதால், இது பெட்ரோல், டீசல் போன்ற வழக்கமான எரிபொருட்களுக்கு மிகச்சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி உத்தியின் மூலம், உலக அளவில் தூய்மையான மற்றும் நிலையான ரயில் இயக்கத்திற்கு ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் மிக உயர்மட்ட நாடுகளின் லிஸ்ட்டில் இந்தியாவும் இப்போது அதிகாரப்பூர்வமாகத் தடம் பதித்துள்ளது.
இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையவுள்ள இந்த பசுமை ரயில், மிக விரைவில் தனது வணிக ரீதியான பொதுப்பயணத்தைத் தொடங்க ரெடியாகி வருகிறதாம்..!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications