மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக?
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் தவெகவினரின் அட்ராசிட்டி அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் அரசு மருத்துவமனைகள், பேருந்துகளில் தவெகவினர் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் செய்யும் சம்பவங்கள், மறுபக்கம் தவெகவின் பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, மே 10ஆம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இதன்பின் அமைச்சரவை உருவாக்கப்பட்டு, தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தவெகவினர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

- மே 19ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பிரசவ வார்டுக்குள் தவெகவினர் அத்துமீறி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் கூட அனுமதிக்காமல் நோயாளிகளுக்கு இடையூறு ஏர்படுத்தியது சர்ச்சையாகியது. சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் தவெகவின் மருத்துவ அணியினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- மே 22ல் தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அம்மா உணவகங்களிலும் தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆய்வு என்ற பெயரில் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். அப்போது தவெகவினர் அரசு அதிகாரிகளை கேள்வி கேட்டதோடு, எச்சரிக்கையும் விடுத்து சென்றனர். இதனை ரீல்ஸாக எடுத்து பதிவிடும் கலாச்சாரமும் அதிகரித்துள்ளது.
- மே 24ல் மதுரை கீழ்மாத்தூர் பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- மே 25ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ஒரு கட்சம் மாமூல் கொடுக்க வேண்டும் என்று தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மிரட்டினார். இதனை கண்டித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின.
- மே 25ல் தாம்பரம் அருத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிபார்த்த தவெக நிர்வாகி தியாகு கைது செய்யப்பட்டார். மாணவியின் புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
- மே 22ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் 15வது மண்டலக் குழு கூட்டத்தில் புகுந்த தவெகவினர், ரீல்ஸ் எடுத்ததோடு மைக் மூலமாக அதிகாரிகளுக்கு அட்வைஸ் கொடுத்தனர்.
- மே 27ல் பேருந்தில் தவெக நிர்வாகி ஒருவர் நடத்துநரிடம் அடையாள அட்டை கேட்டு பஞ்சாயத்து செய்துள்ளார். இதனால் நடத்துநர் பதற்றம் அடைந்து அமைதி காக்க, அங்கிருந்த பொதுமக்கள் அவரை திட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
மரியாதைக்குரிய @tvkஆட்சியில் அரசு பணியாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்ல .. ஒரு ஃபோன் இருந்தா போதும் யாரு யாரு வேணா மிரட்டலாம் .. ஒரு அமைச்சரே என் பேரை சொல்லி ஆய்வு பண்ணுங்கன்னு சொல்றாப்ல .. இன்னொருத்தர் நீ சாப்ட்ருக்க நான் சாப்டல அதனால கேள்வி கேட்காம கிளம்புனு சொல்றாப்ல.. இது… pic.twitter.com/hzZzxceBGv
— 🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️ (@Raj218562485720) May 28, 2026
- மே 28ல் கும்பகோணத்தில் காவலரை தாக்கிய தவெக நிர்வாகிகள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக நிர்வாகிகளான அருண், காளி இருவரும் காவலர் தேவேந்திரனை தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் ரீல்ஸாக வெளியாகி இருக்கிறது. தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டதே தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியினரும் இதுவரை ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளை கேள்வி எழுப்பியது இல்லை.
எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்தால் கூட சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து, அதனை சரி செய்ய வேண்டும். ஆனால் தவெகவினர் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் உத்தரவின் பெயரில் இப்படியான ஆய்வுகளில் ஈடுபடுவது அரசு ஊழியர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications