டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது?
சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய் இன்று தமிழகம் புறப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் அவர் நேரம் ஒதுக்காததால் விஜய் தமிழகம் திரும்பி இருக்கிறார். இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்திக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் வேறொரு நாளில் விஜய் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார். நேற்று டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். மொத்தம் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பானது நடைபெற்றது. பிரதமர் மோடியும் விஜய்யும் சுமார் 10 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியானது.

டெல்லியில் தமிழக முதல்வர் விஜய்
அப்போது முதல்வர் விஜய் பிரதமர் மோடியிடம் சில கோரிக்கைகளையும் அளித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை, தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்ம் உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்ததாகவும், நெதர்லாந்தில் இருந்து செப்பேடுகளை பெற்றதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது நிதி சார்ந்த விஷயங்கள் குறித்து சில கோரிக்கைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியானது.
இந்த டெல்லி பயணத்தின்போது, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டார். ஆனால் அலுவல் வேலை காரணமாக அமித்ஷா இதற்கான நேரத்தினை இன்னும் ஒதுக்கவில்லை. இதனால் இன்று அமித் ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியானது.
சோனியா, ராகுலை சந்திக்கவில்லை
ஆனால் இன்றும் விஜய்யை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தான் அவர் டெல்லி பயணத்தினை முடிந்துக்கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார். முன்னதாக விஜய் இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்த போதும், இன்று தமிழகம் திரும்பும் போது விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
முன்னதாக இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனும் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் முதல்வர் விஜய் இன்று சந்திக்க இருந்தார்.
விஜய் ராகுல் சுவரொட்டிகள்
'10, ஜன்பத்' இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இதனால் '10, ஜன்பத்' இல்லத்தின் வெளியே ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தவிர, இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும் முதல்வர் விஜய்யை தமிழ்நாடு இல்லத்தில் சந்திக்க இருந்ததாக கூறப்பட்டது.
சோனியா காந்தி, ராகுல் காந்தியை விஜய் சந்திக்க திட்டமிட்ட நிலையில் அவரது இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சோனியா காந்தி - ராகுலை முதல்வர் விஜய் வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு நாளில் சந்திக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம்
டெல்லியில் முதல்வர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சோனியா மற்றும் ராகுலை சந்திப்பார் என்று தகவல் வெளியானதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் இன்றைய சந்திப்பு ரத்து ஆகியிருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
என்ன காரணம்?
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மாற்றம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதால் விஜய்யை இன்று சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் வட்டார தரப்பில் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் அரசு 144 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
தவெக ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி சேர்ந்தது. மேலும் இனி வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் இணைந்தே ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் தலைமை கூறியது. விஜய் முதல்வராக பதவியேற்ற போதும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் பங்கேற்று இருந்தார். விஜய்யும் முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளவன், கி வீரமணி என அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருந்தார்.
-
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ்












Click it and Unblock the Notifications