சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க கழுத்தை நெரிச்சா தூக்கி அடிச்சிருவோம்.. நாங்க யானை… டென்ஷன் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணிக்காக யாரும் எங்கள் கழுத்தை பிடித்து நெரிக்கவில்லை அப்படி நெரித்தால் தூக்கி அடிச்சிருவோம் என்றுஅமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக ஐடி விங் புறநானூற்றுப் படை போல் செயல்படும்.

Also Read | அண்ணன் ஸ்டாலின்... உங்களுக்கு தான் துணிச்சல் இருக்கு.. திமுக மேடையில் புகழ்ந்த நாஞ்சில் சம்பத்

மிராஜ் வலிமை

மிராஜ் வலிமை

ஐடி விங் அதிமுகவுக்கு இதயம் போன்றது. மிராஜ் 2000 போர் விமானம் போல் எதிரிகளை வீழ்த்தும் வல்லமையை பெற்றது அதிமுக.

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

கூட்டணிக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகளுக்கு தூக்கம் வராத அளவுக்கு மெகா கூட்டணி அமைந்துள்ளது.

மிகப்பெரிய சக்தி

மிகப்பெரிய சக்தி

மத்தியில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக இருக்கும். அதிமுக ராணுவம் போன்றது அதை யாரும் வெல்ல முடியாது.

அதிமுகவின் கழுத்து

அதிமுகவின் கழுத்து

கூட்டணிக்காக பாஜக அதிமுக கழுத்தை நெரித்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகிறார். அதிமுக கழுத்தை யாராலும் நெரிக்க முடியாது.

தூக்கி அடிச்சிருவோம்

தூக்கி அடிச்சிருவோம்

நாங்கள் யானை பலம் உடையவர்கள். கழுத்தை நெரித்தால் தூக்கி அடிச்சிருவோம். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

தவறு இல்லை

தவறு இல்லை

2 ஆயிரம் ரூபாய் மக்களுக்கு கொடுப்பது தவறு என்று ஸ்டாலின் சொல்ல முடியுமா? உண்மையில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

விரைவில் தேர்தல் அறிக்கை

விரைவில் தேர்தல் அறிக்கை

அது தேர்தலுக்கு கொடுக்கும் லஞ்சம் அல்ல.. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

English summary
We do not have to strangle our necks for the coalition, said Minister Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X