2 கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு சிக்கல்? புதிய ரேஷன் கார்டு எப்போ தெரியுமா? தமிழக அரசு நம்பிக்கை
சென்னை: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை பெருகிபடியே உள்ளது.. இதையடுத்து, புதிய ரேசன் அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்றும் இது தொடர்பான பணிகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில், மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், இதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

ஆய்வுகள்: ஆனால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்..
காரணம், 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் விண்ணப்பித்துள்ளதால், வீட்டில் கிச்சன் எத்தனை உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து முடித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல்: அதன்படி, ஒருசில மாவட்டத்தில் மட்டும் புதிய ரேஷன் கார்டுகளும் விநியோகிக்கப்பட்ட நிலையில், லோக்சபா தேர்தல் காரணமாக அந்த விநியோகமும் நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆனால், அதற்குள் 2.89 லட்சத்துக்கு மேல் ரேஷன் கார்டுகள் விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதாம்.. எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே புதிய கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய கார்டுகள் விநியோகிக்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதனை எதிர்க்கட்சிகளும் விடாமல் கேள்வி எழுப்பியபடியே உள்ளன.
கேஸ் சிலிண்டர்: இந்நிலையில், புதிய கார்டுகள் விநியோகம் குறித்து, பொதுமக்களிடமிருந்து சில கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன.
"வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டும்கூட புது கார்டுகள் வழங்கப்படவில்லை.. கடந்த மாதம் வரை புதிய கார்டுக்கு பெறப்பட்ட, 2.89 லட்சம் விண்ணப்பங்களில், கள விசாரணை முடிந்த, 92,650 பேருக்கு கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இதுவரை, 80,000 பேருக்கு கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறதாம்..
கடந்த வருடம் டிசம்பரில் இதற்கு ஒப்புதல் கிடைத்தாலும், புது ரேஷன்கார்டு இப்போதுதான் அச்சிட தரப்பட்டிருக்கிறதாம். எனவே, ரேஷன் கடைக்கு சென்றால், "உங்களது கார்டுக்கு இன்னும் பொருட்கள் வரவில்லை, அடுத்த மாதம் வந்து வாங்கி கொள்ளுங்கள்" என்று ரேஷன்தாரர்களை அலைக்கழிக்கிறார்களாம். இந்த செப்டம்பர் மாதம் ஒரு வாரம் ஆகிவிட்டது. அதனால், கார்டு வழங்கியவர்களுக்கு, இந்த மாதம் முதல் பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன காரணம்: இதுகுறித்து, உணவு துறை தரப்பில் சொல்லும்போது, ரேஷன் கடைகளில் உள்ள கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய பொருட்கள், ஆகஸ்ட் இறுதியிலிருந்தே கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.. அதேபோல, இந்த மாதம் ரேஷன் கார்டு வழங்கியவருக்கு, அடுத்த மாதத்தில் இருந்து தான் பொருட்கள் வழங்கப்படும். எனவே, இன்னும் சில நாட்களுக்குள் அனைவருக்குமே பொருட்கள் கிடைத்துவிடும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அப்படியானால், இந்த மாதம் ரேஷன் பொருட்கள் கிடைக்காதா? இதுகுறித்து விளக்கம் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications