தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா? கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா? அப்ப பணம் திரும்ப கிடைக்குமா
சென்னை: தட்கல் டிக்கெட்டை புக் செய்றீங்களா? தட்கலில் புக் செய்ததுமே, கேன்சல் செய்ய முடியும்? கேன்சல் செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா?
நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, குறைந்த பெர்த்களை தேர்வு செய்து கொள்ளலாம், ஏனென்றால், இவை பொதுவாக மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.. மேலும், கன்பார்ம் டிக்கெட்டை பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.. லோயர் பெர்த்தில் டிக்கெட் கிடைக்க சான்ஸ் அதிகமாகும்.

தட்கல் முறை: முன்கூட்டியே திட்டமிடும் பயணிகளுக்கு ரிசர்வேஷன் இருப்பதுபோலவே, உடனடியாக வெளியூர் செல்ல வேண்டுமானால், இதற்கு உதவுவதே தட்கல் டிக்கெட் சிஸ்டமாகும்.. அவசர காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்துக்கு மிகவும் உதவிகரமாக இந்த தட்கல் முறை அமைந்து வருகிறது. எந்த வகுப்பில் பயணம் செய்தாலும், அதற்கென குறிப்பிட்ட எண்ணிக்கையில் தட்கல் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
நாளைக்கு நீங்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், இன்றே அதற்காக டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.. ஆனால், தட்கல் டிக்கெட் ஒரு சில நிமிடங்களிலேயே புக் ஆகிவிடும். அதனால் ஒவ்வொரு நொடியும் இங்கு முக்கியமானது.. எனவே, எந்த வகுப்பில் பயணம் செய்ய போகிறீர்கள்? ஏசியா? மூன்றாம் வகுப்பா? என்பதையெல்லாம் முடிவு செய்துவிட்டே புக்கிங் செய்ய வேண்டும்.
புக்கிங் நேரம்: ஏசி வகுப்பென்றால், தினமும் காலை 10:00 மணிக்கு தட்கல் புக்கிங் ஆரம்பித்துவிடும். ஸ்லீப்பர் கோச் என்றால், முன்பதிவு 11 மணிக்கு ஆரம்பிக்கும்.. ஆனால், ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.. இதுவே IRCTC தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி 2 டிக்கெட்டுகள் மட்டுமே செய்ய முடியும்.
சாதாரண டிக்கெட்டுகளை விட தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், அதிக கட்டணமாகும்.. . ஸ்லீப்பர் வகுப்பிற்கு அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், ஏசிக்கான அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தட்கல் கட்டணத்திற்கு உச்சவரம்பு உள்ளது.
டிக்கெட் கட்டணம்: அதன்படி, ஸ்லீப்பர் வகுப்பில் 100 முதல் 200 ரூபாய், ஏசி சேரில் 125 முதல் 225 ரூபாய், ஏசி3 வகுப்பிற்கு 300 முதல் 400 ரூபாய், ஏசி2ம் வகுப்பிற்கு 400 முதல் 500 ரூபாய். எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காரில் தட்கல் கட்டணம் ரூ.400 முதல் 500 வரை மட்டுமே.
அதேசமயம், தட்கல் டிக்கெட்டை ரத்து செய்ய முடியும்.. உங்கள் தட்கல் டிக்கெட் கர்பர்ம் ஆன டிக்கெட் என்றால், அதை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்பப் பெற முடியாது.
டிக்கெட் ரத்து: அதேசமயம் சில நேரங்களில் ரயில்வே இந்த பணத்தை திருப்பித்தருகிறது.. டிக்கெட்டை ரத்து செய்வதற்கான காரணங்களை பொறுத்தே இது அமைகிறது..
உதாரணதுக்கு ரயில் புறப்படும், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தையும் திரும்ப பெறலாம்.. ஆனால், இதற்கு TDR என்று சொல்லலப்படும் டிக்கெட் டெபாசிட் ரசீதை பயணி கையில் வைத்திருக்க வேண்டும்.. பணத்தை திருப்பி தரும்போது, ரெயில்வே எழுத்தர் கட்டணங்களை மட்டுமே கழிக்கிறது..
வெயிட்டிங் லிஸ்ட்: வெயிட்டிங் லிஸ்ட்டில் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லையானால், ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டு, 3 முதல் 4 நாட்களில் பணம் திருப்பி தந்துவிடும். ஆனால், முன்பதிவுக் கட்டணத்தை கழித்துக் கொண்டு மிச்ச பணத்தை தந்துவிடும்.. முன்பதிவு கட்டணம் டிக்கெட் விலையில் இது 10 சதவீதமாகும்.
அதேபோல, ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டு, அந்த வழியாக பயணிக்க விரும்பவில்லையானால், அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
முன்பதிவு: அதேபோல, தட்கலில், முன்பதிவு செய்த முன்பதிவு வகுப்பில் பயணிகளுக்கு சீட்கள் வழங்க முடியாமல், டிக்கெட்டை ரத்து செய்தால் அப்போதும் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது முன்பதிவு வகைக்கு கீழுள்ள பிரிவில் பயணிகளுக்கு இருக்கை வழங்கப்பட்டு, அதில் பயணிக்க விருப்பமில்லையானால், அப்போதும் டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தை பெற்று கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications