ஆச்சரியம் தரும் பூந்திக்கொட்டை.. கருகரு முடி வளர சூப்பர் மூலிகை எண்ணெய்.. தலைமுடி உதிர்வுக்கு தீர்வு
சென்னை: இன்று பெரும்பாலானோருக்கு தீராத பிரச்சனையாக உள்ளது தலைமுடி உதிர்வாகும்.. அதேபோல, இளநரை, அடர்த்தி குறைவு போன்றவையும் இன்றைய இளைய தலைமுறை வரை பாதிப்பை தந்து வருகின்றன.. பொதுவாக, தலைமுடி வளர்ச்சிக்கு சத்தான உணவும், முறையான தூக்கமும் அடிப்படை என்றாலும், ஒருசில இயற்கையான வழிமுறைகளை கையாள்வதால் தலைமுடி உதிர்வை முன்கூட்டியே தடுக்கலாம். அதில் ஒருசில டிப்ஸ்களை மட்டும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய உடலில் ஹார்மோன்களின் அளவு சீராக இருந்தாலே, தலைமுடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும் தலைமுடி உதிரும்..

தலைமுடி உதிர காரணங்கள்
ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுளும் முடி கொட்ட காரணமாகிறது. அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இருந்தாலும் தலைமுடி கொட்டலாம்.
அதேபோல பெண்களை அதிகமாக பாதிக்கும் பிசிஓடி (PCOD) என்ற நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும் தலைமுடி கொட்டலாம், இதனால் தலைமுடியின் வேர்க்கால்களும் பலமிழந்துவிடும். சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும்.. அதிக சூடு காரணமாகவும், தலைமுடி கொட்டலாம். இதைத்தவிர, ஆரோக்கியமற்ற தண்ணீர், பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் முடி உதிர்தலை ஏற்படுத்தி வருகின்றன.
சத்தான உணவுகள்
தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், வைட்டமின்கள், மினரல்கள், புரதங்கள் அடங்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் A, C, E, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடங்கிய உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
அந்தவகையில் இலைவடிவ பச்சை காய்கறிகள், முட்டை, மீன், விதைகள், நட்ஸ், முழு தானியங்களை உணவில் சேர்த்து கொண்டால் முடி வலுப்பெறும், தலைமுடியை பராமரிக்க, தலைமுடியின் வேர்க்கால்களில் கற்றாழை ஜெல்லை கொண்டு மசாஜ் செய்யலாம்.. அல்லது சுத்தமான வெண்ணெய், நெய் போன்றவற்றை தலைமுடியின் வேர்களில் மசாஜ் செய்து குளிக்கலாம்.
ரோஸ்மேரி, லாவெண்டர்
ரோஸ்மேரி, லாவெண்டர் போன்ற எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வதாலும், ரத்த ஓட்டம் தலையில் அதிகரிக்கும்.. இது தலைமுடி உதிர்தலை குறைக்கும்.
வெங்காய சாற்றையும் தலையில் ஊற வைத்து குளிக்கலாம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிலுமே ஒரே மாதிரியான சத்துக்கள் உள்ளன.. வெங்காயத்தை வெட்டி எடுத்து, ஒரு துணியில் கட்டி, சாறு பிழிந்து, அதனை தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தடவலாம்.. இதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்துகின்றன.. சல்பர் நிறைய இருப்பதால் முடியின் வேர்களும் வலுவாகின்றன. நரைமுடி பிரச்சனைக்கும் வெங்காய சாறு தீர்வை தருகிறது.
மூலிகை எண்ணெய்
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் பூந்திக்கொட்டையை தூளாக அரைத்து ஷாம்பு போல தலைக்கு பயன்படுத்தலாம். இதில் நுரை வராது என்றாலும், தலைமுடி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. பூந்திக்கொட்டை பொடியுடன் சீயக்காய் தூள், வெந்தய தூள் கலந்து சிறிது தண்ணீரை குழைத்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்..
மூலிகை எண்ணெய்யும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு, வல்லாரை கீரை சாறு, கரிசலாங்கண்ணி சாறு, ஆகியவற்றை தலா 100 மில்லி லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். வெந்தயத்தை பொடி செய்து 3 ஸ்பூன் அதில் சேர்க்க வேண்டும்.
ஒரு கனமான பாத்திரத்தில், இவைகளை கொட்டி காய்ச்ச வேண்டும்.. தண்ணீரெல்லாம் நீங்கி வெறும் எண்ணெய் இறுதியில் படியும். அதனை சேகரித்து வைத்து, தலையில் சில சொட்டுகளை வைத்து மசாஜ் செய்து குளித்து வந்தாலே முடி உதிர்வு பிரச்சனை கட்டுக்குள் வரும்.












Click it and Unblock the Notifications