வெறும் ரூ.6 கட்டி, 1 லட்சம் பெறலாம்.. போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம்.. எப்படி இணைவது
சென்னை: குழந்தைகளுக்கான சிறந்த காப்பீடு திட்டமான பால் ஜீவன் பீமா யோஜனா பற்றி தெரியுமா? இந்த திட்டத்தின் சிறப்பான அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவை பொறுத்தவரை இன்சூரன்ஸ் பாலிஸிகளுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.. அதிக வட்டி, பாதுகாப்பான சேமிப்பு, வருமான வரி விலக்கு போன்ற பல்வேறு காரணங்களாககே தபால் அலுவலக திட்டங்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம், எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால், மக்களை தாங்கி பிடிப்பது இதுபோன்ற காப்பீட்டு திட்டங்கள்தான்.

அந்தவகையில், இந்திய தபால் துறை வழங்கும், ஒரு சிறந்த காப்பீடு திட்டம்தான் பால் ஜீவன் பீமா யோஜனா என்பதாகும்.. முதியவர்கள், பெண்கள் , பெண் பிள்ளைகளுக்கென்று தனித்தனி சேமிப்பு திட்டங்கள் உள்ளதுபோலவே குழந்தைகளுக்காகவே, தபால் நிலையங்களில் குறைந்த முதலீட்டில் கொண்டுவரப்பட்ட காப்பீட்டு திட்டம்தான் "பால் ஜீவன் பீமா யோஜனா".
6 ரூபாய்: வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூபாய், ஒரு லட்சம் வரையிலான காப்பீட்டை நாம் பெற முடியும்... இந்த பால் ஜீவன் பீமா யோஜனா என்பது, குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தபால் அலுவலகக் கணக்கில் ஒரு நாளைக்கு ரூ. 6 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்... இதன்முதலீடு உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம்... உங்கள் குழந்தையின் கல்வி செலவுகளுக்காக முன்கூட்டியே பணத்தையும் சேமிக்கலாம்.
பிரீமியம்: குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம்... அந்தவகையில், 5 வருடத்துக்கு தினமும் ரூ.6 பிரீமியமாக டெபாசிட் செய்ய வேண்டும்... மொத்தம் 20 வருடங்களுக்கு 18 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், ரூ. 1 லட்சத்தை பெறலாம்.
பால் ஜீவன் பீமா காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்த குழந்தைகள் எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டால் அவர்களின் பெயரில் ரூ.1,00,000 வரையில் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும். ஏழைக் குடும்பங்களுக்கு இது குறைந்தபட்ச நிதிப்பாதுகாப்பை வழங்குகிறது.
முதலீடுகள்: அதேபோல, முதலீடு செய்த குழந்தைகளின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றால் அவர்களது 20 வயதிற்கு பிறகு முதிர்வு தொகையும், அதற்கான வட்டியும் அவர்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில், முதிர்ச்சியின் போது ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
குழந்தைகளுக்கான பால் ஜீவன் பீமா யோஜன திட்டத்தை பெற வேண்டுமானால், பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. ஆனால், தங்களது 2 குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசியை பெற முடியுமே தவிர, 3வது குழந்தைக்கு முதலீடு செய்ய முடியாது. அதேபோல, 5-20 வயது குழந்தைகள் பெயரில் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தபால் நிலையம்: இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பெற்றோர்கள், அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பங்களை தந்து விண்ணப்பிக்கலாம். அதேபோல தங்கள் குழந்தைகளையும் தபால் நிலையத்திற்கு அழைத்து சென்று, இந்த திட்டத்தை தொடங்கச் செய்து, சேமிப்பு பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்கலாம்.
பெயர், வயது மற்றும் முகவரி என்று குழந்தை பற்றிய விவரங்களும், நாமினி பற்றிய விவரங்களையும் பிழையின்றி நிரப்பி தர வேண்டும். அத்துடன், குழந்தையின் அடையாளம் அட்டையையும், முகவரிக்கான அடையாள அட்டையையும் வழங்க வேண்டும்.
குழந்தை வயது: பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது குழந்தைக்கு என்ன வயது இருக்கிறதோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.. அதேபோல கடன் வசதி இல்லை..
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications