மின்சாரம் ஷாக் அடித்தாலும் உயிரை பறிக்காமல் இருக்கனுமா.. வீட்டில் RCCB முக்கியம்!
சென்னை: மின்சார பயன்பாடு செய்யும் போது வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா? மின்சாரம் மற்றும் சோலார் குறித்த நிபுணர் பாலு வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.
சென்னை அயனாவரத்தில் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக அவரது கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி பார்த்த போது தான், சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார் டாக்டர் சரனிதா.

இதை பார்த்த பலரும் லேப்டாப் சார்ஜர் மூலம் மின்சாரம் தாக்கியது எப்படி என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மின் வயர்களில் லீக்கேஜ் ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் மற்றும் சோலார் குறித்த நிபுணரான பாலு பதில் அளித்துள்ளார். அவர் பதிவினை அப்படியே பார்ப்போம்.
"மின்சார பயன்பாடு செய்யும் போது வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அடுத்து தங்கள் வீடுகளில் பொருத்தியுள்ள மின்சார சாதனங்களை எப்படி கையாழ்வது அடுத்து பாதுகாப்பாகன மின்சார சாதனங்களை பொருத்துவதுனு பார்ப்போம். இபி மீட்டரில் இருந்து வரும் சப்ளையை மீட்டர் கட்டவுட் உள்ள 32A இல்ல 16A ப்யூஸ் கேரயரில் கொடுத்து அதில் இருந்து அவுட்புட் வரும் லைனை RCCB இன்புட்டில் (Residual Current Circuit Breaker) கொடுத்து அதில் உள்ள அவுட்புட் சப்ளையை எடுத்து நம் பயன்படுத்தலாம். RCCBஐ பொருத்த வரைக்கும் இது ஒரு சர்க்யூட் பிரேக்கர் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கசிவுகளைக் கண்டறிந்தவுடன் சடனாக ட்ரீப் ஆகும்..

அடுத்து ELCB ( Earth Leakage Circuit Breakers) பயன்பாட்டினை செய்யும் போது, எர்த் வழியாக மைல்டான பவர் லீகேஜ் ஆனாலும் உடனே சர்க்யூட் பிரேக்கர் ஆப் ஆகிடும். அதேபோல் ஒவர் லோடு எடுத்து AMPS அதிகமாகினாலும் உடனே ட்ரீப் ஆகி விடும். இதில் ELCB தேர்வு சரியானதாக இருக்கும் என்பது என்னோட அனுபவத்தில் பார்த்தது. இன்ட்ரஸ்டீயல் எலக்ட்ரீகல் சைடு எங்கள் பாதுகாப்பு முக்கியத்துவத்திற்காக ELCB பயன்பாடு அதிகம்.
RCCB பயன்பாடு MCB க்கு அடுத்தபடியான பாதுகாப்பு தான் இருந்தாலும் ELCB தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்தது.. இனி கட்டவுட்டில் இருந்து வரும் சப்ளையை ELCB யின் இன்புட்டில் கொடுத்து அதில் இருந்து வரும் அவுட்புட்டை கண்ட்ரோல் MCB பாக்ஸ் உள்ள சிங்கில் போல் சர்க்யூட் MCBயில் இன்புட்டாக கொடுத்து ரெடியாக வையுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து ரூம்களையும் தனி தனி லைனாக MCB பாக்ஸ் பக்கம் கொண்டு வந்து, ஒவ்வொரு ரூம்ல கனைக்ட் செய்த லோடுக்கு ஏற்றவாறு MCB மாட்டி அதில் கனைட் செய்ய வேண்டும். முக்கியமாக கிச்சன் லைன்க்கு போகும் லைன் MCB தேர்வு மிக முக்கியம். (ஈரக்கையில் எலக்ட்ரிக் பொருள்களை பயன்படுத்துவார்கள்) கிரைண்டர்,மிக்ஸி,எலக்ட்ரிக் ஸ்டவ் என்று அதிக வாட்டேஜ் உள்ள பொருள்கள் கிச்சனில் தான் இருக்கும்.
கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர்.. லேப்டாப் சார்ஜரில் இருந்த எமன்
ஆகவே முடிந்த வரைக்கும் கிச்சன்ல ரப்பர் மேட் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரப்பர் செப்பல் பயன்படுத்தி பழக வேண்டும். அடுத்து வீட்டில் உள்ள அனைத்து 3பின் பவர் பிளக்கில்ல டாப்பில் இருக்கின்ற எர்த் பாயிண்ட்டில் கண்டிப்பாக எர்த் ஒயர் லிங் பண்ணி அந்த வயரை அனைத்து ரூம்களில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து விட்டுக்கு பின்புறமோ, அல்லது முன்புறமோ ஒரு எர்த் பிட் போட்டு அதில் லிங்க் செய்ய வேண்டும்.
அந்த எர்த் பிட் எப்போதும் ஈரப்பதமுடன் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த எர்த் பிட் மட்டும் சரியாக இருக்கும் பச்சத்தில், உங்கள் உடல் வழியாக 10 வோல்ட் பாய்ந்தாலும் அடுத்த வினாடி ELCB ட்ரீப் ஆகும். ஆகவே உங்கள் வீட்டில் உள்ள அனைத்து 3பின் பிளக் & வாட்டர் பம்ப் & வாசிங் மெசின் & எலக்ட்ரிக் ஸ்டவ் & ஓவன் பெட் அனைத்துக்கும் பாடி எர்த் கொடுத்து நமக்கான பாதுகாப்ப உறுதி செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமாக குழந்தைகளை மொபைலில் சார்ஜ் போட சொல்லக்கூடாது முடிந்த வரைக்கும் நம்ம வீட்டோட எலக்ட்ரிக்கல் பாதுகாப்பு உறுதியாகும் வரை குழந்தைகளை எலக்ட்ரிக் பொருள்கள பயன்படுத்த விடக்கூடாது" இவ்வாறு பாலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications