இந்தியா விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டபோது இந்திரா காந்தி எதிர்ப்பு தெரிவித்தது எப்படி?
சென்னை: 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் வந்த போது அமெரிக்கா அதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது அதற்கு இந்திரா காந்தி எதிர்ப்பு தெரிவித்தது எப்படி என்பதை பார்க்கலாம்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து (தற்போதைய வங்கதேசம்) தனி நாடாக அறிவிக்க மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 1971 ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தின் போது ஆயுதம் இல்லாத கிழக்கு பாகிஸ்தான் மக்களை (தற்போதைய வங்கதேசத்தவர்கள்) பாகிஸ்தான் நாட்டு ராணுவம் படுகொலை செய்தது.

இதனால் லட்சக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அப்போது கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்திய வான்படை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சுமார் 13 நாட்கள் நீடித்த இந்த விடுதலைப் போர் மிகவும் குறுகிய காலம் நடைபெற்றிருந்தாலும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அந்த நாளில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசத்தில்) இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் எந்தவித நிபந்தனையுமின்றி சரணடைந்தனர். இதையடுத்து கிழக்கு பாகிஸ்தான் Bangladesh (வங்கதேசம்) என பெயரிடப்பட்டு அதன் தலைநகர் டாக்கா என்பதையும் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றது என்பதையும் இந்திய நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.
வங்கதேசம் என்ற தனி நாடு பிரிவதை அமெரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிஞரும் இந்தியாவை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சீனாவை இந்திய எல்லைக்கு அருகில் தங்கள் படைகளை நகர்த்துமாறு தெரிவித்தனர். இதற்காக டிசம்பர் 10ஆம் தேதி நிக்சனும் கிஸ்ஸிஞரும் சீனா பிரதிநிதி ஹுவாங் ஹுவாவை சந்தித்து பேசியிருந்தனர்.
அமெரிக்காவின் இந்த முயற்சிகளை எல்லாம் இந்திரா காந்தி புரிந்து கொண்டு இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார். இதனால் அமெரிக்காவின் முயற்சிகள் எதுவும் இந்தியாவில் எடுபடவில்லை. இது போன்று இரு நாடுகளுக்கு இடையே போரில் மூன்றாவது நாடான அமெரிக்க தலையிட்ட போது இந்திரா காந்தி என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
அதிலும் அமெரிக்காவிலேயே அவர் பேசுகையில், ஒரு நாடு எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை கூறுவதற்கு வேறு எந்த நாட்டிற்கு உரிமை இல்லை, அது போல் கூறுவதும் அந்த நாட்டின் பணியும் இல்லை. அது உதவுவதற்கான விஷயமாகவே இருந்தாலும் மூன்றாவது நாடு தலையிட கூடாது. என் நாட்டிற்கும் எனது அண்டை நாட்டிற்கும் நிலவும் சூழல் குறித்து நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். அது என் கடமை.
அதை பொருத்து அவர்களும் தங்கள் கருத்துகளை என்னிடம் சொல்வார்கள். அதை எப்படி புரிந்து கொள்வது , அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்களே முடிவெடுத்துக் கொள்வோம் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்திராவை இரும்பு பெண்மணி என புகழ்ந்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications