Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபையில் உருவப்படம் திறக்கப்படும் பெருமை பெற்ற 16வது தலைவர் கருணாநிதி! மற்ற தலைவர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைக்கிறார்

Recommended Video

    Karunanidhi உருவப்படம் கீழே எழுதப்பட்ட வரிகள்! Karunanidhi photo in assembly | OneIndia Tamil

    நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 15 தலைவர்களின் புகைப்படங்கள் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் 16-வதாக திறக்கப்படுகிறது.

    அதுகுறித்த ஒரு ரீவைண்ட் இதோ:

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    சட்டசபையில், 1948 ஜூலை மாதம் மகாத்மா காந்தியின் புகைப்படம் திறக்கப்பட்டது. அதனை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்தார். அடுத்த மாதத்தில் ராஜாஜிக்கு திருவுருவப்படம் திறக்கப்பட்டது, இதனை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் திறந்து வைத்தார். அதாவது, ஒரு தலைவர் உயிருடன் இருக்கும்போது திறக்கப்பட்ட உருவப்படம் இதுதானாம்.

    அண்ணா உருவப்படத்தை திறந்து வைத்த இந்திரா காந்தி

    அண்ணா உருவப்படத்தை திறந்து வைத்த இந்திரா காந்தி

    1964ம் ஆண்டு மார்ச் மாதம் திருவள்ளுவரின் படத்தை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார். 1969ம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் அண்ணா உருவப்படத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார்.

    எம்ஜிஆர் ஆட்சி காலம்

    எம்ஜிஆர் ஆட்சி காலம்

    எம்.ஜி.ஆா். முதல்வராக இருந்த போது ஐந்து தலைவா்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டன. 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டியின் கைகளால், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1980ம் ஆண்டு பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப்படங்கள் ஒரே நாளில் திறக்கப்பட்டன. கேரள முன்னாள் ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் இவற்றை திறந்து வைத்தார். பின்னர், 1992ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

    ஜெயலலிதா உள்ளிட்ட பலர் படங்கள்

    ஜெயலலிதா உள்ளிட்ட பலர் படங்கள்

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 2018ம் ஆண்டு ஜெயலலிதாவின் புகைப்படமும், 2019ம் ஆண்டு ராமசாமி படையாட்சியின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களை திறந்து வைத்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    கருணாநிதி உருவப்படம்

    கருணாநிதி உருவப்படம்

    சட்டசபையில் படம் திறக்கப்படும் கவுரவத்தை பெறும் 16வது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளார். கருணாநிதி புகைப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+