தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் மனிதாபிமானச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுக்கு மனைப் பட்டா மற்றும் புதிய வீடுகள் கேட்டு வந்த நரிக்குறவர் சமுதாய மக்களின் கோரிக்கையைச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கேட்டறிந்தார். மேலும், அப்போது சிறுவனைத் தனது மடியில் அமர வைத்து, தனது கையாலேயே பாசத்தோடு உணவூட்டி நெகிழ வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பொன்னேரி மற்றும் மீஞ்சூர் கிராமப் பகுதிகளில் இருந்து நரிக்குறவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தனர். தங்களுக்குத் தங்குவதற்கு முறையான மனைப் பட்டா வழங்கக் கோரியும், தங்களது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான புதிய வீடுகள் கட்டித் தரக் கோரியும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசிடம் மனு அளிக்க அவர்கள் வந்திருந்தனர்.

Minister Vanniarasu

அமைச்சரின் அலுவலக அறைக்குள் நுழைந்த அவர்களை வரவேற்ற அமைச்சர் வன்னியரசு, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர், அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அப்போது அங்குப் பெற்றோருடன் வந்திருந்த நரிக்குறவர் இன சிறுவர்களைக் கண்ட அமைச்சர், உடனடியாக அவர்களைத் தன் அருகில் அழைத்தார். அந்தச் சிறுவனைத் தனது படியில் தூக்கி உட்கார வைத்த வன்னியரசு, அன்போடு அங்கிருந்த ஒரு கிண்ணத்தை எடுத்து, சிறுவனுக்கு உணவு ஊட்டினார். அப்போது சிறுவன், முதலில் அமைச்சர் வன்னியரசுக்கு அதைக் கொடுக்கவே அதை வாங்கி சாப்பிட்டார். மேலும், குழந்தைகளுக்கும் அதை ஊட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அமைச்சர் வன்னியரசின் இந்தச் செயலைப் பார்த்த அங்கிருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தோர் தங்களது கைகளைத் தட்டி, நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் வன்னியரசு, ""முதலமைச்சர் விஜய்யின் அரசு, எப்போதும் எளிய மக்களுக்கான அரசு. இது நம்ம அரசு.. உங்களது கோரிக்கையான மனைப் பட்டா மற்றும் புதிய வீடுகள் கட்டித் தரும் பணிகளை, நானே நேரிடையாக உங்களது பகுதிக்கு வந்து கள ஆய்வு செய்து, கட்டாயம் மிக விரைவில் நிறைவேற்றித் தருவேன்" என உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+