Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுஷ்மான் சுகாதார கார்டு.. இது இருந்தா போதும் ஏழைகளுக்கு கிடைக்கும் ரூ 5 லட்சம் வரை சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பதன் மூலம் ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இந்த கார்டை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் சிறந்த சுகாதார வசதிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாஜக அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா எனும் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவை தொடங்கியுள்ளது.

Do you know how to apply for Ayushman health card?

இது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் இலவச சிகிச்சையை பெறுகிறார்கள். மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன் அதன் தகுதி பற்றிய தகவல்களைப் பெறுவது அவசியம். ஏழை மற்றும் நலிவடைந்த வருவாய் பிரிவினருக்காக இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

பழங்குடியினர், வீடற்றோர், ஆதரவற்றோர் , கூலித் தொழிலாளி போன்றோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். உங்கள் தகுதியைச் சரிபார்க்க விரும்பினால் PMJAY எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடலாம். அதில் Am I Eligible என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் செல்போன் எண், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இதற்கு பிறகு, சில நிமிடங்களில் உங்கள் தகுதியை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கூட ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 15 நாட்களுக்கான செலவையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த திட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வயது மற்றும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு திட்டத்தின் பலனை பெறலாம். இந்த திட்டத்திற்கு ரூ 1 கூட செலுத்த தேவையில்லை.

இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்- ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், ஜாதி சான்று, செல்போன் எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை ஆகும். இந்த கார்டு பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா. முதலில் PMJAY என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு புதிய பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் பெயர்,வயது, பாலினம், ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். இதில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். முழு விண்ணப்ப படிவத்தையும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பங்களை அதிகாரிகள் சரி பார்த்த பிறகு ஹெல்த் கார்டை பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+