உங்க ஆதார் போட்டோவை பார்த்து நீங்களே பயந்திருக்கீங்களா? கவலையை விடுங்க! புது போட்டோவை வைக்கலாமே
சென்னை: உங்கள் ஆதார் கார்டில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றிவிட்டு புதிய புகைப்படத்தை வைப்பது எளிமையான காரியமாகும். இதை எப்படி மாற்றுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் கார்டு என்பது மத்திய அரசின் அடையாள அட்டையாகும். இதை பெறுவதற்கு இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்திருக்க வேண்டும். இந்த அடையாள அட்டைக்கு 12 இலக்க அடையாள எண் வழங்கப்படும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை நாடான இந்தியாவில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்கப்படுகிறது.

இந்த கார்டில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவைகளும் பெயர், முகவரி, சுய குறிப்புகளும் உள்ளீடு செய்யப்படும். ஜாதி, மத சான்றுகள், ரேஷன் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவைகளுடன் ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிட்டுள்ளது.
பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இந்த ஆதார் கார்டில் முகவரி, செல்போன் எண், பெயர் மாற்றம் என அனைத்தையும் அதற்கான ஆதாரங்களுடன் செய்து கொள்ளலாம். இதற்காக இசேவை மையத்திற்கும் செல்லலாம்.
இல்லாவிட்டால் ஆன்லைனிலும் செய்யலாம். இந்த நிலையில் ஆதார் கார்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் ஏதோ தலைமுடி எல்லாம் பறந்து கருப்பாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும். அந்த புகைப்படங்களை கூட தற்போது மாற்றலாம். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இது மிகவும் எளிமையானது. https://appointments.uidai.gov.in/bookappointment.aspx என்ற இணையதளத்தில் சென்று அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டும். பின்னர், நெருக்கமான ஆதார் சேவை மையத்திற்கு சென்று, தேவையான படிவத்தைப் பெற்றுக் கொண்டு, புகைப்படத்தை மாற்ற வேண்டிய கோரிக்கையை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
அந்த படிவத்தை சரியாக நிரப்பிய பிறகு பயோமெட்ரிக்ஸ் ரேகை எடுக்கப்படும். விண்ணப்பம் அதிகாரியால் சரிபார்க்கப்படும். இதன் பிறகு புதிய புகைப்படம் கொண்ட ஆதார் கார்டு சில நாட்களில் வழங்கப்படும். இந்த செயல்முறையில் பயோமெட்ரிக்ஸ் ரேகைப் பதிவை உறுதி செய்வதுடன் கோரிக்கை எண்ணைப் பெற்றுக் கொண்டு ஸ்டேட்டஸ் என்ன என்பதை இணைதளத்தில் சரி பார்க்கலாம்.
உங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டை இருந்தால் அதை இதுவரை ஒரு முறை கூட புதுப்பிக்கவில்லை என்றால் அத்தகைய ஆதார் அட்டைகள் நிச்சயம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக ஆதார் சேவை மையத்திற்கு சென்றால் ரூ 50 செலவு செய்ய வேண்டும்.
ஒரு பைசா செலவில்லாமல் எப்படி ஆதார் கார்டை புதுப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். அதிலும் UIDAI எனும் வெப்சைட்டில் போய் புதுப்பித்தால் இலவசம். அடையாள அட்டையாக பான் கார்டையும் முகவரிக்கு வாக்காளர் அட்டையையும் கொடுக்கலாம்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் போய் உங்கள் ஆதார் எண்ணுடன் உள்ளே செல்லவும், அப்போது நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதை உள்ளீடு செய்து உள்ளே சென்றால் உங்கள் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை சரி பாருங்கள். ஒரு வேளை அதில் உள்ள உங்கள் சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் "என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன " என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அங்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள். உங்கள் அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள்.
அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருத்தல் வேண்டும். முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் 2 மெகா பைட்டைவிட குறைவாக இருத்தல் வேண்டும். அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்த வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இந்திய குடிமக்கள், மக்கள் தொகை குறித்த தகவல், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறியலாம். நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்துவிட்டால் அருகில் உள்ள ஆதார் மையம் பற்றிய தகவலை பெறலாம். பின்கோடு மூலம் அருகில் உள்ள ஆதார் மையத்தையும் நீங்கள் அறிய முடியும். அங்கு மேற்சொன்னதை போல் முகவரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை நேரில் கொண்டு போய் புதுப்பித்துக் கொள்ளலாம்.
உங்கள் ஆதார் கார்டில் டிசம்பர் வரை தேவையான மாற்றங்களை இலவசமாக செய்து கொள்ளுங்கள். 15ஆம் தேதி முதல் எந்த சிறிய திருத்தத்திற்கும் ரூ 50 கொடுக்க வேண்டும்.
-
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம்












Click it and Unblock the Notifications