Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைக் பேட்டரியை மாற்ற வேண்டிய அவசியமே வராது.. இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பலருடைய கவனம் Electric Vehicles எனப்படும் மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அமைதியான பயணம், சுற்றுசூழல் பாதுகாப்பு என இதில் நன்மைகள் பல இருந்தாலும், பலருக்கும் இருக்கும் ஒரே பயம் "பேட்டரி சீக்கிரம் வீணாகிவிடுமோ?" என்பதுதான். ஆனால் சில எளிய நடைமுறைகளை மேற்கொண்டால் இவி (EV) பேட்டரியின் ஆயுளை பல ஆண்டுகள் நீட்டிக்க முடியுமாம். அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

மின்சார வாகன பேட்டரி நீண்ட காலம் உழைக்க மேஜர் விஷயம், வாகனத்தை அடிக்கடி பயன்படுத்துவதுதான்.. பெட்ரோல் வாகனங்களைப் போலன்றி, இவி பேட்டரிகளை வாரத்திற்கு 2 முதல் 3 முறையாவது ஓட்ட வேண்டும்..

Electric bike battery maintenance

"செல்ஃப் ஸ்டார்ட்"

நீண்ட நாட்கள் வண்டியை நகர்த்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால், பேட்டரி தானாகவே சார்ஜ் இறங்கி (Battery Drain) அதன் செயல்திறன் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.. எனவே, பேட்டரி செல்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கவும், சார்ஜ் நிற்கும் திறனைத் தக்கவைக்கவும் சீரான இடைவெளியில் வாகனத்தைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

பெட்ரோல் வண்டிகளில் அடிக்கடி "செல்ஃப் ஸ்டார்ட்" செய்வதைத் தவிர்த்து, 'கிக் ஸ்டார்ட்' (Kick Start) பயன்படுத்தினால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும்.. மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, தேவையற்ற நிறுத்தங்களைத் தவிர்த்து சீரான வேகத்தில் செல்வதே பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கும் வழியாகும்..

மின்சாரம் உறிஞ்சப்படுகிறதா

சாலை காலியாக இருக்கிறது என்பதற்காக ஆக்ஸிலரேட்டரை சட்டென்று திருகுவது பேட்டரிக்கு மிகப்பெரிய எதிரி என்கிறார்கள். நீங்கள் திடீரென வேகம் எடுக்கும்போது, பேட்டரியிலிருந்து அதிகப்படியான மின்சாரம் ஒரே நேரத்தில் உறிஞ்சப்படுகிறது.

இது பேட்டரியின் செல்களை சூடாக்கி, அதன் செயல்திறனை காலப்போக்கில் குறைக்கும். எனவே, வாகனத்தை மெதுவாகத் தொடங்கி சீரான வேகத்தில் இயக்குவது பேட்டரிக்கு அழுத்தம் தராமல் நீண்ட தூரம் செல்ல உதவும்.

மின்சார வாகனத்தை பொறுத்தவரை "முன் எச்சரிக்கை" என்பது மிக முக்கியம். நீங்கள் போக வேண்டிய தூரம் எவ்வளவு? உங்கள் வண்டியின் பேட்டரி சார்ஜ் அதற்குப் போதுமா? வழியில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் எங்கு உள்ளன? போன்ற விவரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்..

ஒருவேளை பேட்டரி தீர்ந்து போய் நடுவழியில் நிற்பது வாகனத்திற்கு மட்டுமல்ல, உங்கள் மன நிம்மதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உற்பத்தியாளர்களின் செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலை எளிதாகத் தவிர்க்கலாம்.

20-80 விதிமுறை அவசியம்

பேட்டரி பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் அதன் சார்ஜிங் அளவு. நம்மில் பலருக்கும் பேட்டரியை 100% சார்ஜ் செய்தால்தான் திருப்தி வரும். ஆனால், லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பொறுத்தவரை, அவற்றை எப்போதும் 20% முதல் 80% வரை பராமரிப்பதே சிறந்தது. பேட்டரி முழுமையாகத் தீரும் வரை வண்டியை ஓட்டுவதோ அல்லது இரவு முழுவதும் சார்ஜரில் போட்டு வைப்பதோ பேட்டரியின் வேதியியல் தன்மையை பாதிக்கும். குறிப்பாக, இரவு நேர சார்ஜிங் பேட்டரி அதிக வெப்பமடைய காரணமாகிறது, இது நீண்ட கால அடிப்படையில் ஆபத்தானது.

செம குளிர், செம வெயில்

அதேபோல கடும் வெயிலிலோ அல்லது கடும் குளிரிலோ வாகனத்தை நீண்ட நேரம் நிறுத்தாதீர்கள். குறிப்பாக குளிர்காலத்தில் பேட்டரியின் செயல்திறன் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் வாகனத்தைப் பாதுகாப்பான நிழலில் அல்லது கேரேஜில் நிறுத்துவது நல்லது. ஒரு கவர் போட்டு மூடி வைப்பது இன்னும் கூடுதல் பாதுகாப்பு தரும்.

முக்கியமாக, மின்சார வாகனம் என்பது ஒரு மென்மையான இயந்திரம் என்பதால், அதை முரட்டுத்தனமாக கையாளாமல், மென்மையாக கையாள வேண்டும்.. இப்படி செய்வதால் பணத்தையும் மிச்சப்படுத்தும் சுற்றுச்சூழலையும் காக்கும், அதுமட்டுமல்ல, பேட்டரி பராமரிப்பு என்பது செலவு அல்ல, அது உங்கள் வாகனத்திற்கான ஒரு முதலீடாகம்.. இந்த குட்டி குட்டி டிப்ஸ்கள் உங்கள் மின்சார வாகனப் பயணத்தை இன்னும் இனிமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+