போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? 3 முக்கிய முடிவுகளை எடுத்த மத்திய அரசு
சென்னை: போஸ்ட் ஆபிசில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா, அப்படியென்றால் இனி நீங்கள் இதையெல்லாம் செய்யமுடியாது.
வங்கிகளை போல் தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். இதற்கு ஏடிஎம் கார்டு, பாஸ்புக் , நெட் பேங்கிங், செக் புக், மொபைல் பேங்கிங் என எல்லாம் கிடைக்கிறது.

அந்த வகையில் பலர் வங்கிகளை போல் தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்குகளை தொடங்குகிறார்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டம் என்ற ஒன்று உள்ளது. இந்த திட்டத்தில்தான் தற்போது திருத்தம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சேமிப்பு கணக்கு தொடர்பாக 3 முக்கிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய மாற்றங்களில் கூட்டு கணக்கு (joint account) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திரும்ப பெறுதல், வட்டிச் செலுத்துதல் தொடர்பான விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த விதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு அஞ்சலகத்தின் கூட்டுக் கணக்கு எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை இருவர் மட்டுமே கூட்டுக் கணக்கை வைத்திருக்க முடியும். ஆனால் தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது 3 பேர் இணைந்து அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.
அஞ்சலக சேமிப்புக் கணக்கு திரும்பப் பெறுவதற்கான படிவத்தை மாற்றும் படிவம் 2 இல் இருந்து படிவம் 3 க்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் பாஸ்புக்கை காட்டியே தங்கள் கணக்கில் இருந்து குறைந்தபட்சம் ரூ 50 எடுக்கலாம். இதற்கு முன்னர் ரூ 50 எடுப்பதற்கு படிவம் 2வுடன் முறையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட பாஸ்புக்கை சமர்ப்பித்தால்தான் கொடுக்கப்படும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது.
அது போல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை செலுத்தும் விதி தொடர்பான புதிய விதிகளின்படி 10ஆவது நாள் மற்றும் மாத இறுதிக்குள் ஒரு கணக்கில் குறைந்த தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி அனுமதிக்கப்படும். கணக்கீடு செய்த பிறகு ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அது கணக்கில் வரவு வைக்கப்படும். அதே சமயம் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அந்த கணக்கு முடிந்த மாத இறுதியில் மட்டுமே அவரது கணக்கில் வட்டி செலுத்தப்படும்.












Click it and Unblock the Notifications